மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

இன்று நான்காவது டெஸ்ட்: அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்!

இன்று நான்காவது டெஸ்ட்: அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்!

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று (செப்டம்பர் 2) தொடங்குகிறது. இந்தப் போட்டியில் அஸ்வின் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்’ என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார்.

‘‘இந்திய கேப்டன் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தொடரில் அவரை பெரிய அளவில் ரன் எடுக்க விடாமல் ஆட்டம் இழக்கச் செய்த வகையில் எல்லா பெருமையும் எங்களது பந்து வீச்சாளர்களையே சாரும். இப்போது அவரை அவுட் ஆக்கும் வழிமுறையை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

அடுத்து வரும் போட்டிகளிலும் இதே முயற்சியில் அவருக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து சீக்கிரம் வீழ்த்த வேண்டும். அப்போதுதான் தொடரை வெல்ல முடியும். இந்த டெஸ்டில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். எங்களுக்கு எதிராக விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி, ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்டில் அவரது திறமை என்ன என்பதை நாங்கள் அறிவோம். அதற்கு ஏற்ப நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அஸ்வினால் டெஸ்ட் போட்டிகளில் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். அவரது பந்து வீச்சை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகவே உள்ளோம். போட்டியின்போது யார் பந்து வீசினாலும் அவர்களின் பந்து வீச்சை சமாளித்து ரன் குவிப்பது மட்டும்தான் எங்களது வேலை, அதை சரியாக செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது’’

ஜோ ரூட் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் பேரில் பிரஷித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

-ராஜ்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

வியாழன் 2 செப் 2021