மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

ஜோதிகா வலிமையானவர்: நடிகர் சூர்யா

ஜோதிகா வலிமையானவர்: நடிகர் சூர்யா

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகினருக்கு செய்தியை வெளியிட இருந்தது ஊடகங்கள் மட்டுமே. தொலைத்தொடர்பு அதன் மூலம் தகவல் தொடர்புகளைப் பகிர்ந்துகொள்வதில் மிகப் பெரும் மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்பட்டது. கையடக்க கைபேசிக்குள் உலக தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி அசுரவேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளது.

இப்போது சினிமா துறை சார்ந்த அனைவருமே சமூக வலைதளங்களில் தங்களது பெயரில் கணக்குகளைத் தொடங்கி அதை வணிகரீதியாகப் பயன்படுத்துவதும் அதைப் பணம் செலவு செய்து விளம்பரம் செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது. செய்திகளை வெளியிட ஊடகங்களைத் தேடி வந்தவர்கள் தங்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை, தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் வெளியிடுகின்றனர். அதில் இருந்து செய்திகளை எடுத்து அச்சு ஊடகம் முதல் காட்சி ஊடகம் வரை வெளியிடும் போக்கும் அதிகரித்து வருகிறது. நடிகைகள் பலரும் முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் தங்களுக்கென கணக்கு வைத்துள்ளனர். ஆனால் நடிகை ஜோதிகாவுக்கோ இதுவரை எந்த சமூக ஊடகங்களில் கணக்கு இருந்ததில்லை. இந்த நிலையில் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் கணக்கைத் தொடங்கி சமூக ஊடகத்துக்குள் பிரவேசம் செய்துள்ளார் ஜோதிகா.

கடந்த சில நாட்களுக்கு முன் இமயமலை பகுதிகளில் நண்பர்களுடன் ட்ரெக்கிங் பயணம் மேற்கொண்ட ஜோதிகா, அங்கே தேசிய கொடியை கையில் ஏந்தி பறக்கவிட்டபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது முதல் புகைப்படமாகப் பதிவு செய்து தனது கணக்கை துவக்கியுள்ளார். கணக்கைத் துவங்கிய அரைமணி நேரத்திலேயே 1.2 மில்லியன் பேர் இவரை பின்தொடர ஆரம்பித்துள்ளார்கள் என்பது சாதனையாகக் கூறப்படுகிறது

மனைவி ஜோதிகா இன்ஸ்டாவில் இணைந்ததை வரவேற்றுள்ள சூர்யா, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக என் மனைவி வலிமையானவர் என்று பதிவிட்டுள்ளார்.

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

புதன் 1 செப் 2021