கான்ஜுரிங், உலகம் சுற்றும் வாலிபன்: திரையரங்குகளின் நம்பிக்கை!

entertainment

தமிழகத்தில் ஆங்கிலப் படங்களுக்கு என்று குறிப்பிட்ட பார்வையாளர்கள் உள்ளனர். தமிழ் படங்களுக்கு போன்று விளம்பரங்கள் எதுவும் இல்லாமலே படம் வெளியாகும் அன்று திரையரங்குகளில் கூட்டம் கூடும். ஆங்கிலப் படங்களுக்கு குறிப்பாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகும் பேய் படங்களின் வசூல் நிறைவாகவே இருக்கும்.

கான்ஜுரிங் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் தனியாக தியேட்டரில் பார்க்க முடியாத அளவுக்குத் திகிலாக இருந்தது. மற்ற படங்கள் போன்று அதிகமான ரத்தம், கொலை போன்ற குரூரக் காட்சிகள் இன்றி திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு இவற்றைக் கொண்டே மிரட்டுவதுதான் கான்ஜுரிங் ஸ்டைல்.

அந்த வரிசையில் இப்போது மூன்றாவது பாகம் வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்துக்கு ‘தி டெவி மேட் மீ டூ இட்’ என்று தனி தலைப்பு வைத்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பே உலகம் முழுக்க வெளியாகி வசூலை குவித்து வந்

தாலும் இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டர் திறக்கப்பட்ட மாநிலங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் புதிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இதுவரை குறைந்த அளவிலான தியேட்டர்களே திறக்கப்பட்டிருக்கிறது என்றாலும் திறக்கப்பட்ட தியேட்டர்களில் ஏதாவது படம் திரையிட வேண்டுமே என்பதற்காக கான்ஜுரிங் படத்தைப் பெரும்பாலான தியேட்டர்கள் திரையிட்டுள்ளன.

படம் தமிழிலும் வெளியாகி இருப்பதால் ஆங்கிலப்பட ரசிகர்கள் தியேட்டருக்கு வரத் தொடங்கி இருக்கிறார்கள். தேவையான அளவுக்குக் கூட்டம் வரவில்லை என்றாலும் தமிழில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால் அதுவரை கான்ஜுரிங் போன்று ஏற்கனவே வெளியான ஆங்கிலப் படங்களையும், செப்டம்பர் 3 வெளியாகும் உலகம் சுற்றும் வாலிபன் போன்ற தமிழ் படங்களை நம்பியே திரையரங்குகள் இயங்க வேண்டியுள்ளது.

**-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *