மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

நான்காவது டெஸ்ட்: கோலி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தட்டும்!

நான்காவது டெஸ்ட்: கோலி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தட்டும்!

நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (செப்டம்பர் 2) லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ள நிலையில், “விராட் கோலி அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல், அவருடைய பேட்டிங்கிலும் கவனம் செலுத்தினால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம்” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ.வி.ராமன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணியும், இங்கிலந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும், மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. நாளை (செப்டம்பர் 2) நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.

முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி கேப்டன் ஐந்து இன்னிங்ஸில் பேட்டிங் செய்து ஒரேயொரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். இந்திய அணி முன்னிலை பெறும் அளவுக்கு மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை.

இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ.வி.ராமன், “விராட் கோலி அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல், அவருடைய பேட்டிங்கிலும் கவனம் செலுத்தினால், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பலாம். விராட் கோலி மீது நிறைய அழுத்தம் உள்ளது. அதனாலேயே அனைவரின் கவனம் அவர் மேல் விழுகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் சிறந்த வீரர் என்பதனாலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே உள்ளது.

மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி மீண்டும் தனது பழைய ஃபார்முடன் விளையாடினார். கண்டிப்பாக அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் நன்றாகவே விளையாடுவார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

புதன் 1 செப் 2021