மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

பீஸ்ட் அடுத்த கட்டப் படப்பிடிப்பு திட்டங்கள்!

பீஸ்ட் அடுத்த கட்டப் படப்பிடிப்பு திட்டங்கள்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ இந்த வருடம் வெளியானது. விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருந்தார். நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். அனிருத் இசையில் பாடல்களும் செம ஹிட்.

மாஸ்டர் ஹிட்டைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் 65 உருவாகியிருக்க வேண்டியது. சில காரணங்களால் அக்கூட்டணி இணையவில்லை. அந்த வாய்ப்பு நெல்சன் திலீப் குமாருக்கு கிடைத்தது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கியவர் நெல்சன்.

தற்பொழுது, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகிவரும் படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி செம வைரலானது. விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். இவர்களுடன், யோகிபாபு, சாக்கோ, செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள்.

பீஸ்ட் படத்துக்கான முதல் ஷெட்யூல் ஜார்ஜியாவில் நடந்தது. தொடர்ந்து, இரண்டாவது, மூன்றாவது கட்டப் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்துவருகிறது.

சென்னையில் முக்கியமான மூன்று ஸ்டுடியோக்களில் பிரம்மாண்டமான செட் அமைத்துப் படப்பிடிப்பு நடந்தது. அதில், படத்துக்கான பாடல் காட்சிகள், மால் செட்டில் படப்பிடிப்பு உள்ளிட்டவை நடைபெற்றது.

இந்நிலையில், நான்காம் கட்டப் படப்பிடிப்புக்கு நகர்கிறது படக்குழு. சென்னையில் தான் நான்காவது ஷெட்யூல் ஷூட்டிங்கும் நடக்க இருக்காம். கோகுலம் ஸ்டுடியோவில் பிரத்யோகமாக ஒரு செட் உருவாகிவருகிறதாம். பிரம்மாண்ட லைட்டிங்குடன் அங்கு படப்பிடிப்பு நடத்த இருக்கிறது படக்குழு.

சென்னையில் நடக்கும் நான்காவது ஷெட்யூலை முடித்துவிட்டு, ரஷ்யாவில் அடுத்தக் கட்ட ஷூட்டிங்கை துவங்க இருக்கிறது பீஸ்ட் டீம்.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் படம் தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது. எப்படியும், அடுத்த மாதத்துக்குள் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என எதிர்பார்க்கலாம். அதோடு, அடுத்த பொங்கலுக்கு ‘பீஸ்ட்’ தியேட்டரில் வெளியாகும்.

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

புதன் 1 செப் 2021