மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

விஷால் சுனைனா இணையும் புதிய படம்!

விஷால் சுனைனா இணையும் புதிய படம்!

விஷால் இப்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி மற்றும் அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்தது.

விஷாலின் 31 ஆவது படம் என்று சொல்லப்படும் வீரமே வாகை சூடும் படத்தின் பெயரும் முதல்பார்வையும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விஷால் பிறந்தநாளையொட்டி வெளியானது.

இந்நிலையில், இன்று விஷால் நடிக்கும் 32 ஆவது படத்தின் தொடக்கவிழா நடந்தது.

விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா, நந்தா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த நிறுவனம் தான் விஷால்32 படத்தைத் தயாரிக்கிறது. ஏற்கனவே, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, விஷால் பங்கு பெற்ற “சன் நாம் ஒருவர்” நிகழ்ச்சியை இந்த ராணா புரொடக்‌ஷன்ஸ் தான் தயாரித்தது.

இப்போது இந்நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது.இந்தப் படத்தில் நாயகியாக சுனைனா நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். ஏ.வினோத்குமார், பொன்பார்த்திபன் இருவரும் இணைந்து வசனங்களை எழுதுகிறார்கள். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.

- இராமானுஜம்

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

புதன் 1 செப் 2021