மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

சூர்யா - அதர்வா இணைந்து நடிக்கும் புதிய படம்?

சூர்யா - அதர்வா இணைந்து நடிக்கும் புதிய படம்?

இயக்குநர் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் என்ற படத்தில் 1997இல் விஜய்யுடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக அறிமுகமானவர் சூர்யா. அதன் பிறகு பல படங்களில் நடித்தபோதும் பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா படம் தான் சூர்யாவைப் பற்றி பேச வைக்கும், அவரை நோக்கி தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தங்கள் கவனத்தை திருப்பும் படமாக அமைந்தது.

அதன்பிறகு பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகனும் சூர்யாவுக்கு இன்னொரு திருப்புமுனை படமாக அமைந்தது. அந்த வகையில், ஆரம்ப கால சூர்யாவை முழுமையான நடிகனாக்கியவர் இயக்குநர் பாலா தான், அதன் பிறகு பாலா தயாரிப்பில் மாயாவி படத்தில் நடித்த சூர்யா பின்னர் பாலா இயக்கத்தில், தயாரிப்பில் நடிக்கவில்லை

இந்த நிலையில், கடைசியாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த அர்ஜுன் ரெட்டி ரீமேக்கான வர்மா படத்தை இயக்கினார் பாலா. ஆனால், அந்தப் படத்தை படக்குழு வெளியிடாமல் கிடப்பில் போட்டுவிட்டு, அதே படத்தை வேறு இயக்குநர் இயக்கத்தில் படத்தைத் தயாரித்து வெளியிட்டனர். இது பாலாவுக்கு மட்டுமல்ல; திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் தனது பரதேசி படத்தில் நடித்த அதர்வாவை வைத்து புதிய படம் இயக்கும் வேலைகளில் பாலா இறங்கியிருக்கிறார். அதோடு தன்னை ஆரம்பக் காலத்தில் கைதூக்கி விட்ட பாலாவுக்குக் கைகொடுக்கும் விதமாக இந்தப் படத்தை சூர்யா தயாரிக்கிறார் என்கிற தகவலும் வெளியாகி வந்தன. ஆனால், இப்போது இந்தப் படத்தில் சூர்யா, அதர்வா இருவரும் இணைந்து நடிக்க போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த சில மாதங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

-இராமானுஜம்

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

புதன் 1 செப் 2021