மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 31 ஆக 2021

தெறி சிமெண்ட்டுன்னா யாரு வாங்குவா? அப்டேட் குமாரு

தெறி சிமெண்ட்டுன்னா யாரு வாங்குவா? அப்டேட் குமாரு

சிமெண்ட்டுக்கு தமிழ்நாடு அரசு வலிமைனு பேரு வச்சிருக்குப்பா... தளபதி கூட தல வழியிலதான்யா போறாருனு டீக்கடையில வடையோட சேர்த்து வாக்குவாதமும் வந்துச்சு. விஜய் ரசிகர் ஒருத்தரு ஏதோ சொல்லப் போக. அப்ப டீ மாஸ்டர் கழுத்தைத் திருப்பி ஒரு கேள்வி கேட்டாரு. ‘ஏம்ப்பா... வலிமை சிமென்ட்டுன்னா நாலு பேரு வாங்குவாங்க. தெறி சிமென்ட்டுன்னா யாராச்சும் வாங்குவாங்களா? தெறிப்பு விட்டுரும்னு ஓடிட மாட்டாங்களா? அதான் தல பேரை வச்சிட்டாரு தளபதி’. அடடா... இந்த விளக்கத்தை கொடுத்தது மாஸ்டர்ங்குறது எவ்வளவு பொருத்தமா இருக்கு?

நீங்க அப்டேட் பாருங்க

மயக்குநன்

ராமர் இல்லையேல் அயோத்தி இல்லை!- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

பாஜகவும்தான்..!

நாகராஜசோழன்.MA.MLA.

பாஜகவின் ' பி ' டீம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார் சீமான் - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி

இருக்கு... தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சி இருக்கு...

balebalu

இனிமே யாரு கிட்ட அப்டேட் கேட்டாலும் ரெண்டு சிமெண்ட் மூட்டையை தூக்கி கொடுத்துட போறாங்க Smiling face with open mouth

-valimai

மயக்குநன்

எல்லைகளில் சவால்கள் நிறைந்திருந்தாலும், நாட்டின் பாதுகாப்பில் சமரசம் இல்லை!- அமைச்சர் ராஜ்நாத் சிங்.

உ.பி., பஞ்சாப் தேர்தல்களுக்குதான் இன்னும் நாள் இருக்கே..?!

Memes Tamizha

6 மாசத்துல மொத்த மீடியாவையும் கன்ட்ரோல் பண்ணுவோம்னு சொன்னிங்க

கடைசில ஒரு யூடியூப் சேனல்காரன் உங்க மொத்த கட்சியையும் காலி பண்ணிட்டானே ஜி!

மயக்குநன்

கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும்!- பிரதமர் மோடி.

'ஆன்லைன்'லேயா ஜீ..?!

PrabuG

மனசுல இருக்க மக்காத குப்பைகள்தான் மனுசனை மக்காவே வச்சுருக்கு. சரிதான மக்கா...

ச ப் பா ணி

ஹெல்மெட்டை கழட்டியவுடன் ஆண்கள் கண்ணாடி பார்ப்பது முகம் பார்க்க அல்ல,

முடி இருக்கானு பார்க்க..

மயக்குநன்

குளிர்காலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கலாம்!- மருத்துவ நிபுணர்கள் தகவல்.

கேக்கும்போதே 'நடுக்கம்' வருதே..?!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

அம்மா: டீவி ஸ்டாண்டு கால் உடைஞ்சுருக்கு மாத்துடா

மனைவி: உயரம் அதிகமா வாங்கிருங்க கிச்சன்ல இருந்து பார்த்தா சரியா தெரிய மாட்டேங்குது

அப்பா: அப்படினா சோபாவும் உயரமானதா மாத்திருடா..

மகன்: டீவியும் புதுசா பெரிய சைஸ்ல வாங்கலாம்பா

Final family decision: ஆணியே புடுங்க வேணாம்.

மயக்குநன்

இந்திய இளைஞர்களின் மனதில் சாகச உணர்வு மேலோங்கி நிற்கிறது!- பிரதமர் மோடி.

ஆமா ஜீ... உங்க ஆட்சியில் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை ஓட்டுறதே சாகசம்தான்..!

கோழியின் கிறுக்கல்

வண்டியின் கண்ணாடி சுத்தமாக இருந்தால் எதிர்வரும் வண்டிகள் தெளிவாகத் தெரிவதுப் போலவே,

மனதின் கண்ணாடி சுத்தமாக இருந்தால் எதிர்வரும் பிரச்சனைகள் தெளிவாகத் தெரியும்!!

-லாக் ஆஃப்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

செவ்வாய் 31 ஆக 2021