மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 31 ஆக 2021

தனுசைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியும் இப்படிச் செய்யலாமா?

தனுசைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியும் இப்படிச் செய்யலாமா?

இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக அசத்திக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இவரின் கைவசம் ஐந்து படங்கள் தயாராகிவருகிறது.

கடைசியாக, விஜய் ஆண்டனி நடிப்பில் கொலைகாரன் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியைத் தரவில்லை. இந்நிலையில், விஜய் ஆண்டனிக்கு அடுத்த ரிலீஸாக கோடியில் ஒருவன் தயாராகிவருகிறது.

இதுதவிர, தமிழரசன், அக்னிச்சிறகுகள், காக்கி மற்றும் பிச்சைக்காரன் 2 படங்கள் தயாராகிவருகிறது.

சமீபத்தில் தனுஷ் குறித்த ஒரு செய்தி வெளியானது. என்னவென்றால், தனுஷ் நடித்துவரும் டி 43 படமான மாறன் கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து டி 44 படமான மித்ரன் ஜவஹர் இயக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ படமும் தயாராகிவருகிறது. இவ்விரண்டு படங்களிலும் தனுஷின் தலையீடு இருப்பதாகச் சொல்லப்பட்டது. குறிப்பாக, இயக்குநர்களின் வேலையில் தனுஷ் தலையிடுவதாகக் கூறப்பட்டது. கார்த்திக் நரேன் இதனால் செம அப்செட் என்றெல்லாம் செய்திகள் வெளியானது.

அந்த வரிசையில் விஜய் ஆண்டனியும் இணைந்துவிட்டாராம். விஜய் ஆண்டனி நடித்துவரும் படங்களில் அதிகமாக அவர் தலையீடு இருப்பதாக சலித்துக் கொள்கிறார்கள் இயக்குநர்கள். எந்த அளவுக்கென்றால், எடிட்டிங் மேஜையில் இவரே அமர்ந்து படத்தொகுப்பினைக் கவனிக்கிறாராம். இதனால், எடுத்த காட்சியில் பல மாற்றங்கள் நிகழ்வதாகக் கவலைப்பட்டுக் கொள்கிறார் அந்த இயக்குநர்.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் செம ஹிட். சொல்லப் போனால், விஜய் ஆண்டனி நடித்தப் படங்களிலேயே அதிக கலெக்‌ஷனை இந்தப் படம் தான் பெற்றது. இதன், இரண்டாம் பாகத்துக்கு முதலில் சசியிடம் தான் விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார். ஆனால், படம் துவங்குவதிலேயே விஜய் ஆண்டனியின் தலையீடு இருந்ததால், சசி நைஸாக நழுவிவிட்டார் என்று சொல்லப்பட்டது. தற்பொழுது, நடக்கும் சம்பவங்கள் இதை நிஜமாக்குவதாகவே தெரிகிறது.

இயக்குநரின் சுதந்திரத்தில் தலையிடுவதால் படத்தில் இயக்குநரின் பணியில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. இயக்குநர் நினைத்தது ஒன்றாக இருக்கும், ஆனால், படமாக வேறு ஒன்று வரும். அப்படி எக்கச்சக்கப் படங்களைத் தமிழ் திரைத்துறை கண்டிருக்கிறது. அதில், விஜய் ஆண்டனியின் படமும் இணைகிறது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- தீரன்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

செவ்வாய் 31 ஆக 2021