மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஆக 2021

வீடும், நாடும்:அப்டேட் குமாரு

வீடும், நாடும்:அப்டேட் குமாரு

வீட்ல இருக்குற நகைய வித்து, அண்டான் குண்டானை வித்து ஆம்பளை பணமாக்கினா குடும்பம் நடத்தத் தெரியாதவன்னு திட்டுறாங்க. ஆனா நம்ம நாட்டோட சொத்தை வித்து பணம் திரட்டினா அதைத் திட்டம்னு சொல்றாங்களே எப்படிண்ணே அப்படினு இன்னிக்கு காலையில கறிக் கடையில ஒரு ஃபிரண்டு கேட்டாப்ல. நான் உரிச்ச கோழி, உயிர்கோழினு எழுதியிருந்த போர்டைப் பாத்துக்கிட்டே கேக்காதது மாதிரி வந்துட்டேன்.

நீங்க அப்டேட் பாருங்க

ச ப் பா ணி

டீ போடுவதையும் You tube ஐ பார்த்து 'காப்பி'அடிக்க வேண்டியுள்ளது.

கோழியின் கிறுக்கல்!

முன்னெல்லாம் Screenshot எடுக்கணும்னா videoவை pause பண்ணி எடுக்கணும்!

இப்பெல்லாம் Jio netwrok இருந்தா போதும், அதுவே நொடிக்கொரு முறை நின்று நின்று தான் வருது!!

balebalu

டிவி ல மொக்க படம் , தட்டிலே உப்புமா -

நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு

பர்வீன் யூனுஸ்

ஞாயிறு அன்று செமத்தியா கல்லா கட்டும் இடங்கள் -1) டாஸ்மாக் 2) மட்டன்/சிக்கன்/மீன் கடை 3) சலூன். Verified.

கடைநிலை ஊழியன்

ஞாயிற்றுக்கிழமை காலையில கறி கடைக்கு போறவன் - குடும்ப இஸ்திரி !!

ஞாயிற்றுக்கிழமை காலையில சலூனுக்கு போறவன் - employee !!

ஞாயிற்றுக்கிழமை காலையில, அதுக்குள்ள விடிஞ்சிருச்சா னு கேக்குறவன் - VIP !!

சாய் பெருமாள்

பணம் தேவைப்படும் போது ஏடிஎம் செல்வதைப்போல...

பிரச்சனைகள் வரும்போது மட்டும் சிலருக்கு கடவுள் ஞாபகம் வருகிறது.

Mannar & company

சீரியல் பார்க்கும் மனைவியின் அலப்பறைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது, வெப் சீரீஸ் பார்க்கும் கணவனின் அட்டகாசங்கள்!

மயக்குநன்

சர்வதேச அளவில் அதிக சிசிடிவி கேமரா கொண்ட நகரங்களில் சென்னைக்கு 3-வது இடம்!- 'போர்ப்ஸ் இந்தியா' இதழ் தகவல்.

முக்கியமான இடங்களில், முக்கியமான நேரங்களில் சிசிடிவி கேமரா வேலை பார்க்காம போயிடறதுதான் பிரச்சினையே..!

ச ப் பா ணி

சில உறவுகளை உள்ளங்கையினுள் நீரைப் போல நிரப்பிப் பாதுகாத்திருந்தாலும்

அப்போதும் விரலிடுக்கில் ஊறி வழிந்துவிடுகின்றன.

PrabuG

ஜிஎஸ்டி வரி.

~ பழகிடுச்சு.

ப்ளாட்ஃபார்ம் டிக்கட் அம்பது ரூபாய்.

~ பழகிடுச்சு.

வங்கி கட்டணங்கள்.

~ பழகிடுச்சு.

பெட்ரோல் நூறு ரூபாய்.

~ பழகிடுச்சு.

சம்பளம் பத்தலை.

~ பழகிடுச்சு.

மத்திய அரசு.

~ பழகிடுச்சு.

இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா.

தர்மஅடி தர்மலிங்கம்

விற்பனை செய்ய இது ஒன்றும் உங்கள் சொத்துக்கள் அல்ல’; மம்தா.

அது தெரிஞ்சு தான் குத்தகைக்கு மட்டும் விட்ருக்காங்களோ..??

சாய் பெருமாள்

அம்மாக்களுக்கென்று புதிதாக அலைபேசி வாங்கியதே கிடையாது.

வீட்டில் புதிய அலைபேசி வாங்கும் போது... பழைய அலைபேசி அம்மாவுக்கென்பது எழுதப்படாத விதி.

மயக்குநன்

தொழில்நுட்பத்தால் இந்தியா வல்லரசாகும்!- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

யூ மீன் 'பெகாசஸ்'..?!

கோழியின் கிறுக்கல்!!

செய்த தவறுக்கான தண்டனையை விட, செய்யாத தவறுக்கான அறிவுரை தான் அதிக தண்டனை!!

-லாக் ஆஃப்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

ஞாயிறு 29 ஆக 2021