மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஆக 2021

அஜித்துக்காக பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்த சிரஞ்சீவி

அஜித்துக்காக பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்த சிரஞ்சீவி

சினிமாவில் அடிக்கடி நிகழும் ஒரு சம்பவம் இது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பணியாற்றும்போது, சில நேரங்களில் இரண்டுப் படங்களுமே ஒரே நேரத்தில் படப்பிடிப்புக்குச் செல்லும் சம்பவங்கள் நடக்கும். அப்படி, ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் வேறு வேறு இடங்களில் நடந்தால் நடிகர்களும், படத்தில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் திண்டாட்டம் தான். அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது.

அஜித் நடிக்க ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், யுவன் இசையில் முதல் சிங்கிள் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது, படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்துவருகிறது. வெளிநாடு ஷூட்டிங் மட்டுமே மீதமிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றி வருகிறார்.

சிரஞ்சீவி-யின் 153வது படத்தை மோகன்ராஜா இயக்கிவருகிறார். மலையாளத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் இது. சிரஞ்சீவி நடிக்கும் இப்படத்துக்கு ‘காட்ஃபாதர்’ என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்க இருந்தது. சொல்லப் போனால், வலிமை சென்னை ஷூட் நடந்துகொண்டிருந்த நேரத்தில் சிரஞ்சீவியின் காட்ஃபாதரும் துவங்க இருந்தது. இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா தான்.

வலிமை சென்னையில் ஷூட்டிங், சிரஞ்சீவியின் காட்ஃபாதர் ஹைதராபாத்தில் ஷூட்டிங். பொதுவாக, பெரிய ஒளிப்பதிவாளர்கள் இப்படியான சூழலில் தங்களுடைய உதவியாளர்களை அனுப்பிவைப்பார்கள். ஆனால், இந்தப் பக்கம் அஜித், அந்தப் பக்கம் சிரஞ்சீவி என இரண்டு பேருமே பெரிய நடிகர்கள். பெரிய பட்ஜெட் படங்களென்பதால் உதவியாளர்களை அனுப்புவதெல்லாம் வேலைக்காகாது.

என்னசெய்வதென்று தெரியாமல் திணறிவந்திருக்கிறார் நிரவ்ஷா. இக்கட்டான சூழலில் சிரஞ்சீவி பெருந்தன்மையுடன் ஒரு முடிவெடுத்தது திரையுலகில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் படத்தை முடித்துவிட்டு நிரவ்ஷா வரட்டுமென இரண்டு நாட்கள் படப்பிடிப்பைத் தள்ளிவைத்துவிட்டாராம் சிரஞ்சீவி. பொதுவாக, இப்படியான சிக்கல் வரும்போது இரண்டு பக்கமும் நடிகர்கள் கட்டாயம் வரவேண்டுமென அழுத்தம் கொடுப்பார்கள்.ஆனால், சிரஞ்சீவி அப்படியானவர் அல்ல. லூசிஃபர் ரீமேக்கை முடித்துவிட்டு, அஜித்தின் வேதாளம் பட ரீமேக்கில் தான் அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- தீரன்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

ஞாயிறு 29 ஆக 2021