மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஆக 2021

‘சார்பட்டா பரம்பரை’ தியேட்டர் ரிலீஸ் திட்டம் கைவிடப்பட காரணம் ?

‘சார்பட்டா பரம்பரை’ தியேட்டர் ரிலீஸ் திட்டம் கைவிடப்பட காரணம் ?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு கடந்த ஜூலை 22ஆம் தேதி பிரைம் ஓடிடியில் இப்படம் வெளியானது. வடசென்னையில் நடந்த சில உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. எமர்ஜென்ஸி காலக்கட்டம், அதற்குள் திமுக - அதிமுக அரசியல் , சாதிய அரசியல், தலித் பிரச்னை என பல விஷயங்களை ஸ்போர்ட்ஸ் டிராமாக்குள் பேசி அசத்தியிருக்கிறார் பா.ரஞ்சித்.

ரங்கன் வாத்தியாராக பசுபதி, கபிலனாக ஆர்யா, வேம்புலியாக ஜான் கொக்கன், கெவின் டேடியாக ஜான்விஜய், மாரியம்மாவாக துஷாரா எனபடத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு கேரக்டருமே மக்கள் மத்தியில் பிரபலமானது. டான்ஸிங் ரோஸ், பீடி வாத்தியார், டைகர் கார்டன், மீரான் என நினைவுக்கூறத்தக்க பல கதாபாத்திரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது.

சார்பட்டா பரம்பரை படமானது தியேட்டர் மெட்டீரியல் படம். முழுக்க முழுக்க திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கக் கூடிய படம். பா.ரஞ்சித்தும் தியேட்டர் அனுபவத்தை மனதில் கொண்டே படத்தை உருவாக்கியிருக்கிறார். பிரம்மாண்டமான குத்துச்சண்டைக் களம், நூறுக்கும் மேல் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் என படம் திரையரங்கில் பார்க்க பிரம்மாண்டமாக இருந்திருக்கும். இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் போது, அனைவரின் வருத்தமுமாக இதுதான் இருந்தது. திரையரங்க ரிலீசை மிஸ் செய்துவிட்டோமே என ரசிகர்களின் கவலையாக இருந்தது.

இந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்துக்கான தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியுள்ளது கலைஞர் டிவி. சமீபத்தில் கலைஞர் டிவியின் CFO கார்த்திக்குடன் ஆர்யா இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. ஏழரைக் கோடிக்கு தொலைக்காட்சி உரிமையை விற்பனை செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்தப் படத்தை ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் திரையரங்கில் வெளியிடவும் திட்டமிட்டிருந்தார்கள். அதற்கான பேச்சுவார்த்தைகளுமே தீவிரமானது. ஆனால், சார்பட்டா பரம்பரை படத்தை டிஜிட்டல் ப்ரீமியர் முறையில் பிரைம் வீடியோவுக்கு ஏற்கெனவே விற்பனை செய்திருப்பதால், திரையரங்க ரிலீஸூக்கு பிரைம் சம்மதம் தெரிவிக்கவில்லை.

பிரைம் ஓடிடியானது சார்பட்டா படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கு சம்மதம் தெரிவிக்காத சூழலால், நிச்சயம் திரையரங்கில் வராது என்பதே உண்மை. திரையரங்கில் சார்பட்டா பரம்பரை பட அனுபவத்தை பார்த்துவிடலாம் என இருந்த ரசிகர்களுக்கு இது நிச்சயம் ஏமாற்றமே.

இருப்பினும், வர இருக்கும் பண்டிகை தினமொன்றில் விரைவில் ‘சார்பட்டா பரம்பரை’ படமானது கலைஞர் டிவியில் ஓளிபரப்பாக இருப்பது ஆறுதலான விஷயம்.

- ஆதினி

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

ஞாயிறு 29 ஆக 2021