மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

‘கசட தபற’ ஒளிபரப்பில் தடங்கல்.. வெங்கட் பிரபு மீது கடுப்பான சோனி!

‘கசட தபற’ ஒளிபரப்பில் தடங்கல்.. வெங்கட் பிரபு மீது கடுப்பான சோனி!

இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகியிருக்கும் படம் ‘கசட தபற’. ஆறு கதைகள் கொண்ட ஆந்தாலஜி வடிவிலான திரைப்படம்.

பொதுவாக வடசென்னையை மையமாகக் கொண்டு பல சினிமாக்கள் உருவாகியிருக்கிறது. இந்த ஆந்தாலஜியானது தென் சென்னையை மையமாகக் கொண்ட கதைக்களம். இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒவ்வொரு கதைக்கும் வேறு வேறு ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், எடிட்டர்கள் பணியாற்றியுள்ளனர். இந்த ஆந்தாலஜியானது கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ஆகஸ்ட் 26ஆம் தேதி இரவு 11.30மணிக்கு ஒளிபரப்பினைத் துவங்கினார்கள். துவங்கிய உடனேயே, ஒளிபரப்பை நிறுத்திவிட்டார்கள்.

ஏனென்றால், புதிய சிக்கலொன்று பூதாகரமாக அப்போது வெடித்திருக்கிறது. வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவான படங்களுக்காக ஏசிஎஸ் அவுட் டோர் யூனிட் நிறுவனத்துக்கு 40 லட்சம் வரை பாக்கி வைத்திருக்கிறாராம் வெங்கட்பிரபு. இவரை பலமுறை அணுகியும் பணம் வராததால், நீதிமன்றத்தை நாடி படத்தை ரிலீஸ் செய்ய தடை கோரி கடிதமொன்றை அனுப்பியிருக்கிறது அந்நிறுவனம்.

அதனால், ‘கசடதபற’ படம் சொன்ன நேரத்தில் வெளியாவதில் பெரும் தடங்கல் ஏற்பட்டது. உடனடியாக, பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர். கசட தபற படத்துக்கு டிரைடண்ட் ரவீந்திரன் தான் ஃபைனான்ஸ் வழங்கியிருக்கிறார். முதல் பிரதி அடிப்படையில் தான் வெங்கட் பிரபு தயாரித்திருக்கிறார். அதனால், டிரைடண்ட் ரவீந்திரன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு ஏசிஎஸ் அவுட்டோர் யூனிட்டுக்கான 40 லட்சம் பாக்கியை செட்டில் செய்திருக்கிறார். அதன்பிறகே, படம் சோனி லிவ்வில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி ஸ்ட்ரீமிங் ஆனது.

பொதுவாக, திரையரங்கில் வெளியானால் தான் இப்படியான முட்டுக்கட்டைகள் வரும். ஓடிடியில் தானே படம் வெளியாகிறது என அசால்ட்டாக இருந்துவிட்டார் வெங்கட்பிரபு. ஆனால், புத்திசாலித்தனமாக காய் நகர்த்தி பணத்தைப் பெற்றுவிட்டது ஏசிஎஸ். இந்த சம்பவத்தால் கொஞ்சம் கடுப்பாகிவிட்டதாம் சோனி லிவ்.

- தீரன்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

சனி 28 ஆக 2021