மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

படும் பாட்டை பாட்டாக்கிட்டாரு: அப்டேட் குமாரு

படும் பாட்டை பாட்டாக்கிட்டாரு: அப்டேட் குமாரு

இன்னிக்கு சட்டமன்றத்துல ஓபிஎஸ், ’நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் நிலைமைனு பாட்டு பாடியிருக்காரே. அதுக்கு என்ன அர்த்தம்’ னு ஒரு அதிமுக அண்ணன்கிட்ட கேட்டேன். ‘நதியில வெள்ளம்னா இங்க நடக்குற திமுக ஆட்சி... கரையினில் நெருப்புன்னா மேல நடக்கிற மோடி ஆட்சி. இங்கயும் விழ முடியாம அங்கயும் விழ முடியாக அல்லாடுற நிலைமைதான்னு வெளிப்படையா சொல்லியிருக்காரு. படுற பாட்டை பாட்டாவே பாடிட்டார்’ னு பொழிப்புரை சொன்னாரு.

நீங்க அப்டேட் பாருங்க

amudu

தவ வாழ்க்கை என்பது யாதெனில், ஆன்ராய்டு மொபைல் இருந்தும், அதை நோண்டாமல், சும்மா இருப்பது.

தர்மஅடி தர்மலிங்கம்

அரசு சொத்துகளை குத்தகை விட்டு நிதி திரட்டும் திட்டம்: தொடங்கி வைத்தார் மத்திய நிதியமைச்சர்.

நல்லவேளை... பழக்க தோஷத்தில விற்காம விட்டிங்களே.??

balebalu

பாதை எங்கும் வண்ண வெளிச்சங்கள் -

-ட்ராபிக் சிக்னல்

ச ப் பா ணி

நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, நடுவே இறைவனின் சிரிப்பு இதுதான் என் நிலைமை.-ஓ.பி.எஸ்

தட் உள்ள அழுகிறேன்...

வெளியே சிரிக்கிறேன்

நல்ல வேசந்தான் வெளுத்து வாங்கிறேன் மொமண்ட்

மயக்குநன்

நமது கட்சி இப்போது 'உருமாறிய' மக்கள் நீதி மய்யமாக இருக்கிறது!- கமல்.

இனியாவது கொரோனா மாதிரி மக்களிடம் வேகமா பரவுதான்னு பார்ப்போம்..!

ℳ𝐬𝐝இதயவன்*

பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன ~ ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்கிகாந்த தாஸ்

ஆமா ஆமா கேஸ் விலை 25ரூ கூட்டி இருக்காங்களே?!

சரவணன். ℳ

ஈபிஎஸ் ~ "விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தா மட்டும் தான் கண்டித்து வெளிநடப்பு செய்வேன்.. மத்தபடி நானும் விவசாயி தாங்க..."

மயக்குநன்

2022-ம் ஆண்டு இறுதியில், கொரோனா தொற்றில் இருந்து உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பு!- உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தகவல்.

இவ்ளோ நாளா பால் ஊத்துற செய்தியா சொல்லிட்டு இருந்தவங்க... இப்பத்தான் நெஞ்சில் பால் வார்க்கிற செய்தியை சொல்லி இருக்காங்கப்பா..!

உள்ளூராட்டக்காரன்

எம்எல்ஏவா இருந்தா கூட சனிக்கிழமை சட்டமன்றத்துக்கு போக வேண்டி இருக்கு

இப்போ சொல்லுங்க, யாரு சார் கெத்து?

- IT guy

மயக்குநன்

அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது!- முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி.

இபிஎஸ் அண்ட் கோ ~ இந்த அம்மாவே லஞ்ச ஒழிப்புத்துறையை உசுப்பேத்தி விட்டுரும் போலிருக்கே..?!

கோழியின் கிறுக்கல்!!

ஆடி மாசம் மனைவி பிறந்த வீட்டுக்கு போய்டுவாங்கன்னு கவலைப்பட்ட கணவன்களை விட,

துணிக்கடைக்கு போய்டுவாறோன்னு கவலைப்படுகிற கணவன்களே அதிகம்!!

-லாக் ஆஃப்

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

சனி 28 ஆக 2021