மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

இந்தியன்-2 : விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்!

இந்தியன்-2 : விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் வடிவேலு-இயக்குநர் ஷங்கர் இருவருக்கும் இடையில் நீடித்து வந்த இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படம் சம்பந்தமான பஞ்சாயத்தை தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு பேசி முடித்து, வடிவேலுவுக்கு விதிக்கப்பட்டிருந்த தொழில் ரீதியான தடை நீக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து லைகா - ஷங்கர் இடையில் நிகழ்ந்த பிணக்கை முடிவுக்கு கொண்டு வர சினிமா சங்கங்கள், முக்கியமான திரையுலக பிரபலங்கள் முயற்சி செய்தும் முடிவுக்கு வரவில்லை.

ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. இப்படம் தொடங்கியதிலிருந்தே பல சிக்கல்கள். எல்லாவற்றையும் தாண்டி படப்பிடிப்பு தொடர்ந்துகொண்டிருந்தபோது ஒரு பெரும் விபத்து, உயிர் இழப்பு ஏற்பட்டு படப்பிடிப்பு தடைபட்டது.

அதன்பின் கொரோனா தொற்று, ஊரடங்கு தொடங்கியதால் இந்தியன் 2 படப்பிடிப்பு தடைபட்டு முடங்கியது அதனால் படப்பிடிப்புக்கு மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டது

படத்தின் பட்ஜெட் அளவுக்கதிகமாகப் போய்க்கொண்டே இருக்கிறதென்கிற சிக்கல் உருவானது. பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் சுமுகமுடிவு எட்டப்படவில்லை.எனவே, ராம்சரண் நடிக்கும் தெலுங்குப்படம் மற்றும் ரன்வீர்சிங் நடிக்கும் இந்திப்படம் ஆகியனவற்றை இயக்க ஒப்புக்கொண்டு அதன் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார்.

அதனால், ஷங்கர் மீது சென்னை உயர் நீதிமன்றம், ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் ஷங்கர் மீது வழக்குத் தொடர்ந்தது லைகா நிறுவனம். அது மட்டும் இன்றி இந்தியாவில் உள்ள அனைத்து திரைப்பட சங்கங்களின் கதவை தட்டியது லைகா நிறுவனம்.

இச்சிக்கல் நீண்டு கொண்டே போய்க்கொண்டிருந்தது. இப்போது அச்சிக்கலுக்குச் சுமுகத் தீர்வு காணப்பட்டுள்ளதாம்.

சென்னை வந்திருக்கும் லைகா நிறுவனர் சுபாஷ்கரனை, மனைவி மற்றும் மேலாளருடன் சென்று சந்தித்திருக்கிறார் ஷங்கர். நள்ளிரவில் நடந்த இச்சந்திப்பின்போது எல்லா விசயங்களும் பேசப்பட்டு கடைசியில் சுமுக நிலை உருவாகிவிட்டதாம். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிடுவதாக ஷங்கர் உறுதியளித்தாராம்.

இதன்படி, ஷங்கர் மீது லைகா நிறுவனம் போட்டிருக்கும் எல்லா வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

-இராமானுஜம்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

சனி 28 ஆக 2021