மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

‘கூகுள் குட்டப்பா’ என மாற்றியது ஏன்?

‘கூகுள் குட்டப்பா’ என மாற்றியது ஏன்?

மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஏராளமாக தமிழில் ரீமேக் ஆகியிருக்கிறது. சில படங்கள் வெற்றியையும், பல படங்கள் தோல்வியையும் தழுவியிருக்கிறது. நேட்டிவிட்டி, கதையின் ஆத்மா ஆகியவையே ரீமேக் படங்களின் வெற்றியை நிர்ணயிக்கிறது. அப்படி, மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக்காகிவரும் படம் ‘கூகுள் குட்டப்பன்’.

கடந்த 2019ல் சுராஜ் மற்றும் செளபின் நடிப்பில் வெளியான படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25’ . இப்படத்தை ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். கிராமத்து சூழலில் வாழும் தந்தையான சுராஜூக்கு வீட்டு உதவிக்காக, ரோபோ ஒன்றை அனுப்பிவைக்கிறார் ஜப்பானில் பணியாற்றும் மகன் செளபின். விஞ்ஞானத்துக்கும் பாசத்துக்கும் நடுவிலான மெல்லிய கதையாக அட்டகாசமாக உருவாகியிருக்கும் திரைக்கதை.

இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை கே.எஸ்.ரவிக்குமார் கைப்பற்றினார். இந்தப் படத்தினை அவரின் உதவியாளர்கள் இயக்க, படத்தினைத் தயாரித்து நடிக்கவும் செய்திருக்கிறார். சுராஜ் கேரக்டரில் தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கிறார். செளபின் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடித்திருக்கிறார். நாயகியாக லாஸ்லியா மற்றும் காமெடி டிராக்கில் யோகிபாபு நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகி வைரலாகிவருகிறது.

இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர்களான சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்கிவருகிறார்கள். இதில், கே.எஸ்.ரவிக்குமாரின் சகோதரரின் மகன் சபரி என்பது கூடுதல் தகவல். இவர்களே இயக்குநர்களென்றாலும், படத்திற்கான இறுதி முடிவுகளை கே.எஸ்.ரவிக்குமார் தான் எடுக்கிறாராம். ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்துக்கு தமிழில் கூகுள் குட்டப்பன் என்றே முதலில் டைட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், டீஸரில் படத்துக்கு ‘கூகுள் குட்டப்பா’ என டைட்டிலை மாற்றியுள்ளனர்.

ஏன் இந்த மாற்றம் என விசாரித்தால், குட்டப்பன் என்றிருந்தால் மலையாள நெடி வீசுவதாக நினைக்கிறதாம் படக்குழு. அதோடு, லிங்கா, வீரா என வரும் பெயர்களில் ஒரு ஃபயர் இருக்கும். குறிப்பாக, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘படையப்பா’ மிகப்பெரிய ஹிட். இதுவே, ‘படையப்பன்’ என்றிருந்தால் மக்கள் விரும்பியிருப்பார்களா என தெரியவில்லை.

ஆக, குட்டப்பன் எனும் பெயரை குட்டப்பா என மாற்றும் யோசனை நீண்ட நாளாக கே.எஸ்.ரவிக்குமார் மனதில் ஓடிக் கொண்டிருந்ததாம். அதன்படி, ‘கூகுள் குட்டப்பன்’ டைட்டிலை ‘கூகுள் குட்டப்பா’ என்று மாற்றியிருக்கிறது படக்குழு. டைட்டில் மாற்றம் படத்தினை இன்னும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் என நம்புகிறதாம் படக்குழு.

- ஆதினி

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

சனி 28 ஆக 2021