மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

கெளதம் மேனன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்... சாத்தியமா?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்... சாத்தியமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் தயாராகி வருகிறது. ஒன்று, நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள்மோகன், வினய் நடிப்பில் ‘டாக்டர்’. திரையரங்க ரிலீஸூக்காக நீண்ட நாளாகக் காத்துக் கொண்டிருக்கிறது. திரையரங்க அனுமதி கிடைத்திருப்பதால் எப்பொழுது வேண்டுமென்றாலும் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.

இரண்டாவது, ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல்ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அயலான்’. அறிவியல் புனைவுத் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. ஏலியன் கான்செப்ட் என்பதால் சிஜி பணிகள் எக்கச்சக்கமாக இடம்பெறுகின்றன.

மூன்றாவது, புதுமுக இயக்குநர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் லேட்டஸ்டாக நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘டான்’ . இதில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படம், எப்படியும் இரண்டொரு மாதத்தில் முடிந்துவிடும் .

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்காராம் சிவகார்த்திகேயன். இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல். அடுத்த வருடம் இந்தப் படத்தின் படப்பிடிப்பை துவங்கவும் இருப்பதாக தகவல்.

ஏனெனில், டான் படத்தை முடித்த கையோடு, அட்லீயின் உதவியாளராக இருந்த அசோக் எனும் புதுமுக இயக்குநரின் படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் முடிக்க வேண்டும். அதுபோல, சிம்பு நடிக்க ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கிவருகிறார் கெளதம் மேனன். அதோடு, நடிகராகவும் அவருக்குப் படங்கள் இருக்கிறது. அதனால், இருவருக்குமான கமிட்மெண்டுகளை இந்த வருடம் முடித்துவிட்டு, அடுத்த வருட துவக்கத்தில் கெளதம் - சிவகார்த்திகேயன் காம்போவை எதிர்பார்க்கலாம்.

-ஆதினி

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

சனி 28 ஆக 2021