மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 ஆக 2021

ஓடிடி, தியேட்டர் டிவி: படத்தை ரிலீஸ் செய்யும் சேதுபதி

ஓடிடி, தியேட்டர்  டிவி: படத்தை ரிலீஸ் செய்யும் சேதுபதி

திரையரங்குகள் திறந்துவிட்ட நிலையிலும், ஓடிடி & டிவி-யில் புதிய படங்கள் வெளியாவது குறித்து தொடர்ச்சியாக அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கிற்கு வருவார்களா எனும் சந்தேகம் தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

விஜய், அஜித், ரஜினி மாதிரியான பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸானால் மட்டுமே திரையரங்குகளுக்கு ஒரு ரீஸ்டார்ட் பட்டன் போல இருக்கும் என நினைக்கிறார்கள் திரையுலகினர். அதுவரை சின்ன பட்ஜெட் படங்களை பெரும் லாபத்துக்கு, பாதுகாப்பாக ஓடிடிக்குக் கொண்டுவரும் எண்ணத்தில் இருக்கிறார்கள் பெரும்பாலான தயாரிப்பாளர்கள். இருப்பினும், சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, சுந்தர்.சியின் ‘அரண்மனை 3’ மாதிரியான படங்கள் திரையரங்க ரிலீஸை மட்டுமே எதிர்நோக்குகிறது. இந்நிலையில், விஜய்சேதுபதியின் மூன்று படங்கள் தியேட்டர், ஓடிடி & டிவி-யில் தலா ஒவ்வொரு படங்கள் வீதம் வெளியாக இருக்கிறது.

தியேட்டர் ரிலீஸ்

இயற்கை, ஈ, பேராண்மை, பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை படங்களை இயக்கிய கம்யூனிச சித்தாந்தவாதி மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் . இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் லாபம்.அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இப்படத்தின் ரிலீஸூக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் காத்திருந்தது. முக்கிய லீட் ரோலில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகளின் போதுதான், எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார். சமீபத்தில் படத்தின் முழு பணிகளும் முடிவடைந்தது. இந்நிலையில், இப்படத்தை கடந்த ரம்ஜானுக்கு வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால், சூழல் கைகூடவில்லை. இந்நிலையில், லாபம் படத்தை வருகிற செப்டம்பர் 09ஆம் தேதி திரையரங்கில் வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஓடிடி ரிலீஸ்

நேற்று லாபம் பட ரிலீஸ் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, மற்றுமொரு பட அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி, டாப்ஸி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அனபெல் சேதுபதி’. முன்னதாக, இந்தப் படத்துக்கு அனபெல் சுப்பிரமனியம் என டைட்டில் கூறப்பட்டது. ஆனால், பெயரில் சின்ன மாற்றத்துடன் ‘அனபெல் சேதுபதி’ டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

டிவி ரிலீஸ்

புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. விஜய் சேதுபதியுடன் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் விஜய்சேதுபதிக்கு இணையான ரோலில் பார்த்திபன் நடித்திருக்கிறார். படமானது அரசியல் கதைக்களம் கொண்டது. இந்தப் படத்தை செப்டம்பர் 10ஆம் தேதி சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

- ஆதினி

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

வெள்ளி 27 ஆக 2021