மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 ஆக 2021

லோகேஷூடன் இணையும் சூர்யா: காரணம்?

லோகேஷூடன் இணையும் சூர்யா: காரணம்?

தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்கள் சிலர் அடிக்கடி சந்தித்துக் கொள்வது நடந்து வந்தது. பிறந்த நாளென்றில் சந்தித்துக் கொள்வது, மாலை நேர உணவு வேளையில் சந்திப்பது என்பது வழக்கமாக நடந்து வந்தது. இப்போது, இந்த இயக்குனர்கள் இணைந்து புதிய முடிவொன்றை எடுத்திருக்கிறார்கள்.

என்னவென்றால், மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின், லிங்குசாமி, வெற்றிமாறன், கெளதம் மேனன், லோகேஷ் கனகராஜ் மற்றும் பாலாஜி சக்திவேல் என தமிழின் முன்னணி இயக்குநர்களான இவர்கள் இணைந்து தயாரிப்பு நிறுவனமொன்றை துவங்கியிருக்கிறார்கள். தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘ரெயின் ஆன் ஃபிலிம்ஸ்’ என பெயரிட்டுள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக தொடர்ச்சியாக படங்களைத் தயாரிக்கும் முடிவில் இருக்கிறார்கள். இந்த முன் முயற்சியை மணிரத்னமும் ஷங்கரும் முன்னெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்டமாக, ரெயின் ஆன் பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் ஒரு படமொன்றை இயக்க இருக்கிறார். இன்றைய காலக்கட்டத்தில் சென்சேஷனல் இயக்குநரென்றால் அது லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்கள் இவருக்கு மிகப்பெரிய முகவரியைக் கொடுத்திருக்கிறது. தற்பொழுது, கமல்ஹாசன் நடிக்க ‘விக்ரம்’ படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தை முடித்த கையோடு, ரெயின் ஆன் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு படம் இயக்க இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருக்கிறதாம். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உறுப்பினர்களாக இருக்கும் அனைவருமே டாப் இயக்குநர்கள். அதனால், எளிதில் நடிகர்களை பேசி அழைத்துவந்துவிட முடியும். யாரை வேண்டுமென்றாலும் தேர்ந்தெடுத்துவிட முடியும். ஆனால், மிகச்சிறந்தப் படைப்புகளை இந்த இயக்குநர்கள் இணைந்து தந்தால் சிறப்பானதாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது, பாண்டிராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. இந்தப் படத்தை முடித்த கையோடு, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஆதினி

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

வெள்ளி 27 ஆக 2021