மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 ஆக 2021

அனபெல் சுப்பிரமணியம் டைட்டில் ‘அனபெல் சேதுபதி’ ஆனது ஏன்?

அனபெல் சுப்பிரமணியம் டைட்டில் ‘அனபெல் சேதுபதி’ ஆனது ஏன்?

தமிழின் உச்ச நடிகர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர் விஜய்சேதுபதி. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல், புதுமையான கதைகளாலும், கதாபாத்திரங்களாலும் எளிதில் ஈர்க்கப்படக் கூடியவர். வில்லனாக, குணச்சித்திர ரோலில் , கெஸ்ட் ரோலில் என நடிப்பின் அனைத்துப் பரிணாமத்திலும் விஜய்சேதுபதியைப் பார்க்கலாம்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் லாபம் , பார்த்திபனுடன் நடித்திருக்கும் துக்ளக் தர்பார் & டாப்ஸியுடன் நடித்திருக்கும் அனபெல் சேதுபதி படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது உறுதியாகியிருக்கிறது.

இதில், டாப்ஸியுடன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அனபெல் சேதுபதி’. அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் என்பவர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். விஜய்சேதுபதி & டாப்ஸி இருவருமே இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இருவருக்குமே இணையான கதாபாத்திரங்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் நடிகை ராதிகா, யோகிபாபு, ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர், தேவதர்ஷினி, சேத்தன், சுரேகா வாணி, மதுமிதா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு மேற்கொள்ள, பிரதீப் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கிஷோர் என்பவர் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

முதலில், இந்தப் படத்துக்கு அனபெல் சுப்பிரமணியம் என டைட்டில் சொல்லப்பட்டது. ஆனால், திடீரென தலைப்பை மாற்ற என்ன காரணம் என்று விசாரித்தால் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.

முன்னர் சொன்னதுபோல, படத்தில் டாப்ஸி & விஜய்சேதுபதி என இரண்டு பேருக்குமே இணையான கதாபாத்திரம். இந்தப் படத்தை சேதுபதியின் படமாக காட்டினால் மட்டுமே, பட பிஸ்னஸில் அது கைகொடுக்கும். அதோடு, விஜய்சேதுபதியின் பெயரை பட டைட்டிலில் சேர்க்கும்போது, அவரின் ஈடுபாடும் படத்தில் அதிகமாக இருக்கும். விஜய்சேதுபதியை மகிழ்விக்க விரும்பிய காரணத்தால் டைட்டிலை மாற்றும் முடிவுக்கு வந்தார்களாம்.

அதோடு, இந்தப் படம் ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கிறது. அனபெல் சுப்பிரமணியம் என்று டைட்டில் இருந்தால் சந்தோஷ் சுப்பிரமணியம் படமே உடனடியாக மக்களுக்கு நினைவுக்கு வரும். அதனால், பேமிலி டிராமா ஜானர் படமென்று தவறாக நினைத்துவிடக்கூடாது. ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டுமெனும் உயர்ந்த எண்ணத்துடனும் யோசித்து, இறுதியாக தலைப்பை ‘அனபெல் சேதுபதி’ என்று மாற்றியிருக்கிறார்கள். இந்த இரண்டு காரணங்களுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டும் என்பதில் சந்தேகமில்லை.

- ஆதினி

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

வெள்ளி 27 ஆக 2021