மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 ஆக 2021

காயம் பற்றி கவலைப்படாத அபிஷேக் பச்சன்

காயம் பற்றி கவலைப்படாத அபிஷேக் பச்சன்

இந்தி நடிகர்அபிஷேக் பச்சன் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் 'ஒத்த செருப்பு' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் அபிஷேக் பச்சனுக்கு விபத்து ஏற்பட்டு அவரது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அபிஷேக் பச்சன் இன்ஸ்டாகிராமில், “சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் கடந்த புதன்கிழமை எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டது. எனது வலது கையில் காயம் ஏற்பட்டது. அதைச் சரி செய்ய அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. உடனே மும்பை திரும்பி, அறுவை சிகிச்சை செய்தேன். எல்லாம் சரி செய்யப்பட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னை திரும்பினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

படப்பிடிப்பில் ஒரு மேஜையில் அவர் ஓங்கி அடிப்பது போன்றகாட்சி ஒன்று படமாகும் போது யதார்த்தமாக வர வேண்டும் என்பதற்காக உண்மையிலே ஓங்கி அடித்துவிட்டாராம். கொஞ்சம் கனமான மேஜை என்பதால் அது அபிஷேக்கின் கையை நன்றாகவே பதம் பார்த்துவிட்டது.

கையில் தற்போது பெரிய கட்டுடன் அபிஷேக் இருந்தாலும், திரைக்கதையில் அந்த கையுடனே அவர் நடிப்பது போன்று காட்சியை மாற்றிவிட்டாராம் இயக்குநர்.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

வெள்ளி 27 ஆக 2021