மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

'அனைத்து சாதியினரும் அர்ச்சகர்' பற்றி பேசும் படம்!

'அனைத்து சாதியினரும் அர்ச்சகர்'  பற்றி பேசும் படம்!

சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘என்னங்க சார் உங்க சட்டம்.’

இந்தப் படத்தில் ஆர்.எஸ்.கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகிணி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா, பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – குணா பாலசுப்ரமணியம், ஒளிப்பதிவு – அருண் கிருஷ்ணா, படத் தொகுப்பு – பிரகாஷ் கருணாநிதி, கலை இயக்கம் – டீஜே, பாடல்கள் – கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், எம்.எஸ்.முத்து, திவ்யா லக்‌ஷனா, ஸ்வேதா ராஜு, ஒப்பனை – தேஜா, ஒலிப்பதிவு – கிருஷ்ணன் சுப்ரமணியம், பாடகர்கள் – பென்னி தயால், வினீத் ஶ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன், டப்பிங் இன்ஜீனியர் – அருண் உமா, புகைப்படங்கள் – ராம் பிரசாத், டி.ஐ. – ஶ்ரீராம்.

சமீபத்தில், “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படமும் இதே கதைக் கருவில்தான் உருவாகியுள்ளது.

தமிழக அரசு இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாகவே, படக்குழு படத்தை முடித்து, தணிக்கை (UA) சான்றிதழையும் பெற்றுவிட்டது. இருந்தபோதிலும், படக்குழு படத்தின் தலைப்பை மாற்ற போவதில்லையாம். முதலில் வைக்கப்பட்ட அதே பெயரில்தான் இந்தப் படத்தை வெளியிட போகிறார்களாம்.

படம் ஒருபக்கத்தைச் சார்ந்ததாக இருக்காது; நிச்சயமாக இரண்டு பக்க நியாயங்களைக் கூறுவதாக இருக்கும் எனப் படக்குழுவினர் உறுதியாகக் கூறுகிறார்கள். இந்தக் கருவில் இருக்கும் நன்மை தீமைகள் பற்றி படம் பேசும். இயக்குநர் பிரபு ஜெயராம் படத்துக்காக நிறைய தரவுகளை ஆராய்ந்து அதன்படி படத்துக்கான திரைக்கதையை அமைத்துள்ளார் என்கிறது படக்குழு.

இந்த படம் Duplex என்ற வகையின் கீழ் உருவாகியுள்ளது. இது இரட்டை நிலையில் இருப்பதைக் குறிப்பது.

உதாரணத்திற்கு ‘ஒரு வீடு இரு வாசல்’ என்பதே இதன் சாராம்சம். படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்குத் தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்தது, இரண்டாம் பகுதி ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகள் தீவிரமாகச் சொல்வதாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர்.

இந்தப் படத்தின் மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், படத்தின் முதல் பகுதியில் 12 சிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் படத்தின் இரண்டாம் பகுதியில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் முழுக்க முழுக்க பார்வையாளர்களைத் திரையுடன் ஒன்றிப்போகச் செய்யும், பொழுதுபோக்கு படமாக அமையும் எனப் படக்குழு உறுதியளிக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வையை நடிகர் ஜெயம் ரவி வெளியிட அது பொதுவெளியில் கவனிப்புக்குள்ளாகி படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் மூன்று புதிய போஸ்டர்களும் படத்தின் கதையின் மையத்தைக் கூறி பெரும் ஆர்வத்தைத் தூண்டும்விதமாக அமைந்துள்ளது.

இந்த மூன்று புதிய போஸ்டர்களும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தைப் போற்றும்படி அமைந்துள்ளது.

-இராமானுஜம்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

வியாழன் 26 ஆக 2021