மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

சமந்தா கேட்ட மன்னிப்பு எதற்காக?

சமந்தா கேட்ட மன்னிப்பு எதற்காக?

அமேசான் ஓடிடி தளத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான வெப் தொடர் 'தி பேமிலி மேன் 2'. ராஜ்.டிகே இயக்கிய இந்தத் தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா, மைம் கோபி, இயக்குநர் அழகம்பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர். இலங்கைத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் பற்றி பல தவறான தகவல்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழக அரசு மற்றும் சில அரசியல் கட்சிகள் இந்தத் தொடருக்குத் தடை விதிக்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. ஆனால், எதிர்ப்புகளை மீறி தொடர் வெளியானது.

தற்போது ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இத்தொடர் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தா, 'மக்களுக்கென இருக்கும் சொந்த கருத்துகளை நான் அனுமதிக்கிறேன். அந்தக் கருத்தில் அவர்கள் அப்படியே தொடரும்பட்சத்தில் மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படி ஏதாவது ஒன்றை நான் வேண்டுமென்றே செய்வதாக அவர்கள் நினைக்கக் கூடாது என்பதற்காக எனது மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. அப்படி நடந்திருந்தால் மிகவும் வருந்துகிறேன்.

ஆனால், தொடர் ஒளிபரப்பானதும் பல சத்தங்கள் நின்றுவிட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வளவு ஒன்றும் மோசமாக இல்லை என்று சிலர் சொன்னதையும் பார்த்தேன். இன்னும் தங்களது கருத்தைத் தொடரும் மக்களுக்கு எனது மன்னிப்பு' என்று கூறியுள்ளார். இந்த நிலையில், தமிழ் சினிமாவில் சமந்தா சம்பந்தப்பட்ட படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

தமிழில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தற்போது சமந்தா நடித்து வருகிறார். வேறு சில படங்களிலும் இவர் நடித்திருப்பதால் அந்தப் படங்களின் வியாபாரம், திரையிடல் இவற்றில் பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமந்தா கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் போன்று மன்னிப்பு கேட்டுள்ளார் என்கின்றனர் சினிமா வட்டாரத்தில்.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

வியாழன் 26 ஆக 2021