மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

நயன்தாரா இல்லாமலேயே துவங்கிய நயன்தாரா நெக்ஸ்ட்!

நயன்தாரா இல்லாமலேயே துவங்கிய நயன்தாரா நெக்ஸ்ட்!

நாயகி முக்கியத்துவம் கொண்டப் படங்களில் சோலோ லீடாகவும், டாப் நடிகர்களுக்கு ஹீரோயினாகவும் நடித்துவருகிறார் நயன்தாரா. சோலோ லீடாக இவர் நடித்து சமீபத்தில் ‘நெற்றிக்கண்’ படம் வெளியானது.

சித்தார்த் நடித்த ‘அவள்’ பட இயக்குநர் மிலிந்த் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா, அஜ்மல் நடிக்க ஓடிடியில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ். இந்தப் படத்தைத் தொடர்ந்து, சிவா இயக்கத்தில் ரஜினியுடன் நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ & விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தாவுடன் நடித்திருக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்கள் தயாராகிவருகிறது. இந்நிலையில், நயன்தாரா சோலோ லீடாக நடிக்கும் அடுத்தப்படம் துவங்கிவிட்டது.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்புக்காகப் பாண்டிச்சேரியில் இருக்கிறார் நயன்தாரா. விஜய்சேதுபதி, சமந்தாவுடனான காமினேஷன் காட்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது. சமீபத்தில் கூட, வலையோசை பாடலை ரீமிக்ஸ் செய்யும் காட்சிகள் படமாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், நயன்தாராவின் அடுத்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க யுவராஜ் தயாளன் இயக்குகிறார். எலி, தெனாலி ராமன், பட்டாப்பட்டி படங்களை இயக்கியவர் யுவராஜ் தயாளன். இவர் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடந்துவருகிறது. ஆனால், காத்துவாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்கில் இருப்பதால் நயன்தாரா இந்த ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவில்லை. நயன்தாரா அல்லாத பிற காட்சிகளை தற்பொழுது படமாக்கிவருகிறார்கள் .

இந்தப் படத்தில் நயன்தாராவுடன் விதார்ந்த் முக்கிய ரோலில் நடிக்கிறார். அதோடு, மாநகரம் படத்தில் நடித்த ஸ்ரீ இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளார். பெரிய பட்ஜெட்டில் காமிக்ஸ் ஸ்டோரியாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள். எப்படியும், இந்தப் படத்தை அடுத்த வருடம் ரிலீஸ் செய்யும் திட்டத்தில் படப்பிடிப்பைத் துவங்கியிருக்கிறார்கள்.

இந்தப் படத்துக்கு நடுவே அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இணையவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், தொடர் பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருப்பதால் ஷாரூக் படத்தில் நயன் இன்னும் உறுதியாகவில்லை. ஒருவேளை பாலிவுட்டில் நயன் நடிப்பது உறுதியானால், யுவராஜ் படத்தின் படப்பிடிப்பில் மாற்றங்கள் நிகழலாம்.

- ஆதினி

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

வியாழன் 26 ஆக 2021