மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

யோகிபாபுவின் ‘வீரப்பனின் கஜானா’ டைட்டில் மாற்றம் !

யோகிபாபுவின் ‘வீரப்பனின் கஜானா’ டைட்டில் மாற்றம் !

ஒரு பக்கம் பெரிய ஹீரோக்களின் படங்களில் காமெடி டிராக்கில் நடித்து வருகிறார். அதேநேரம் சோலோ லீடாக நடித்தும் அசத்தி வருகிறார் யோகிபாபு.

அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் என இரண்டு படங்களிலும் நடித்து வரும் யோகிபாபு, ஹீரோவாக நடிக்க சமீபத்தில் ‘மண்டேலா’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், யோகிபாபு ஹீரோவாக நடிக்க உருவாகிவரும் படம் ‘வீரப்பனின் கஜானா’.

, ‘ராட்சசி’ திரைப்பட இயக்குநர் கவுதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் இருவரும் இணைந்து கதையெழுத புதுமுக இயக்குநர் யாசின் இயக்கத்தில் இப்படம் உருவாகிவருகிறது. காட்டுக்குள் நடக்கும் காமெடி ஃபேண்டஸி த்ரில்லர் படமாக இது இருக்கும் என்கிறார்கள். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

யோகிபாபுவுடன் மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வீரப்பன் தொடர்பான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுது.

இந்நிலையில், படத்தில் தலைப்பு ‘வீரப்பனின் கஜானா’ என்றிருப்பது வீரப்பனின் குடும்பத்தினர் விரும்பவில்லையாம். அதனால், வீரப்பனின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. வீரப்பனின் வாழ்க்கை படத்தின் எந்த இடத்திலும் இடம்பெறாது என்று படக்குழு கூறியதாகத் தெரிகிறது.

இருப்பினும், வீரப்பன் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் படத்தின் தலைப்பை மாற்ற இருக்காம் படக்குழு. விரைவிலேயே, யோகிபாபு படத்துக்குப் புதிய தலைப்பு அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

- ஆதினி

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

வியாழன் 26 ஆக 2021