மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

சிலம்பரசனை காப்பாற்றிய ஐசரி கணேஷ்

சிலம்பரசனை காப்பாற்றிய ஐசரி கணேஷ்

சிலம்பரசன் நடிக்கும் புதிய படம் வெந்து தணிந்தது காடு.கெளதம் மேனன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் நடந்தது. அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமுன்பு பெரிய சிக்கல் ஏற்பட்டது.

நடிகர் சிம்பு மீது நான்கு தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருப்பதால் அச்சிக்கல் தீரும்வரை புதிய படத்தின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம் என்று தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்தது.

ஆகஸ்ட் 2ஆம் தேதி இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தயாரிப்பாளர்கள் சங்கம், ஆர்.கே.செல்வமணி, உஷா ராஜேந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை

அதன்பின் முதல்கட்டப் படப்பிடிப்பில் தொழிலாளர்கள் சம்மேளனம் கலந்துகொண்டது. அதனால், இனிமேல் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லை என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.

அதோடு, முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு (ஆகஸ்ட் 25,2021) இச்சிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது.

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் சிலம்பரசன் சார்பாக வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரிகணேசன் கலந்துகொண்டார்.

அப்போது, தயாரிப்பாளர்கள் சிவசங்கர், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் தேனாண்டாள் முரளி ஆகியோருக்குக் கொடுக்கப்பட வேண்டிய தொகையைத் தாமே கொடுத்துவிடுவதாக ஒப்புக்கொண்டார். அதோடு, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிக்கல் தொடர்பாக அவரையும் அழைத்துப் பேசி சமரசமாகப் போவதற்கும் ஐசரி கணேசன் உறுதி கொடுத்துள்ளார். மைக்கேல் ராயப்பன் விசயத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாகவும் ஐசரி கணேஷ் கடிதம் கொடுத்திருக்கிறாராம்.

இதனால், தயாரிப்பாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியன சிம்பு படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதென அறிவித்துள்ளார்கள்.

அதனால், இன்று அப்படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

ஏற்கனவே இயக்குநர் கௌதம்மேனன் இது போன்ற பணப்பிரச்சினையில் சிக்கிக்கொண்டபோது அதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு கௌதம் மேனன் கடனை அடைத்தார் ஐசரி கணேஷ் அதன் காரணமாக வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் மூன்று படங்களுக்கு கௌதம் மேனன் இயக்குநராக பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

அதே போன்று சிலம்பரசன் தரப்பில் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகை 10 கோடிக்குள் வரும் இதனை திருப்பிக்கொடுக்க பொறுப்பேற்றுக்கொண்ட ஐசரி கணேஷ் தயாரிப்பில் கூடுதலாக இரண்டு படங்கள் நடிப்பதற்கு சிலம்பரசன் தரப்பில் உறுதி வழங்கப்பட்டிருக்கிறது.

-இராமானுஜம்

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

வியாழன் 26 ஆக 2021