மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

பாலா தயாரிப்பில் அதர்வா

பாலா தயாரிப்பில் அதர்வா

இயக்குநர் பாலா தற்போது நடிகர் சூர்யா தயாரிப்பில் ஒரு படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். அவர் படம் இயக்குவதோடு குறிப்பிடத்தக்க வகையிலான படங்களைத் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்தும் வருகிறார்.

பாலாவின் பி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் விசித்திரன். 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜோசப்’. மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம்தான் தமிழில் விசித்திரன் என்கிற பெயரில் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தை மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.

இந்த நிலையில், இயக்குநர் பாலா தயாரிப்பில் ஒரு புதிய படம் தயாரிப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. படத்தை இயக்கும் வாய்ப்பு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன் ராமுக்குக் கிடைத்திருக்கிறது. அதர்வா நாயகனாக நடிக்கவிருக்கிறார். பொன் ராம் இப்போது விஜய் சேதுபதி நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு இந்தப் படத்தைத் தொடங்குவாராம்.

-இராமானுஜம்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

புதன் 25 ஆக 2021