மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

சூர்யா செய்த புதிய சாதனை!

சூர்யா செய்த புதிய சாதனை!

நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றிகரமாக இயங்கிவரும் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக சூரரைப் போற்று வெளியானது. கடந்த வருடம் நவம்பர் 12ஆம் தேதி பிரைம் ஓடிடியில் வெளியாகி பெரிய ஹிட்டானது.

ஆஸ்கர் பந்தயத்தில் கூட சூரரைப் போற்று படத்தின் பெயர் அடிபட்டது. இந்நிலையில், சமீபத்தில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூரரைப்போற்று படம் திரையிடப்பட்டது. அதோடு, சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்தப் படமாக சூரரைப் போற்று படமும் தேர்வானது.

சூர்யாவுக்கு பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சோசியல் மீடியாவில் தொடர்ச்சியாக இயங்கிவரும் நபர் சூர்யா. குறிப்பாக, ட்விட்டரை தன்னுடைய பட புரமோஷனுக்காக மட்டுமல்லாமல், மற்ற இளம் இயக்குநர்களின் சின்ன பட்ஜெட் படங்களின் புரோமோஷனுக்கும் பயன்படுத்துவார்.

இந்நிலையில், சூர்யாவின் ட்விட்டர் கணக்கானது 7 மில்லியன் ஃபாலோயர்களைத் தொட்டுள்ளது. இதன்மூலம், முதல் தென்னிந்திய நடிகராக குறுகிய காலத்தில் 7 மில்லியன் எனும் சாதனையைப் படைத்துள்ளார் சூர்யா.

கடந்த 2016ல் ட்விட்டரில் இணைந்தார் சூர்யா. ஐந்தே வருடத்தில் இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், ரசிகர்கள் #SURIYAismTwitterIs7MStronger ஹேஷ் டேக்கினை டிரெண்ட் செய்து அன்பை தெரிவித்தனர்.

பட புரோமோஷனுக்காக மட்டும் ட்விட்டரை பயன்படுத்தாமல் சமூக அக்கறையுடன் கருத்துத் தெரிவிப்பவர் சூர்யா. எந்தப் பிரச்னையென்றாலும் உடனடியாக குரல் கொடுப்பவர். அதனால், ட்விட்டரில் அதிகப்படியான ரசிகர்கள் இவரைப் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆதினி

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

புதன் 25 ஆக 2021