மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

தியேட்டர் வசூல் : தலைமை தாங்குமா தலைவி படம்!

தியேட்டர் வசூல் : தலைமை தாங்குமா தலைவி படம்!

திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கிவிட்டது ஆகஸ்ட் 27 முதல் புதிய திரைப்படங்கள் வெளிவரும் என்ற நம்பிக்கையில் தியேட்டர்களை சுத்தப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருகின்றன

சிறு பட்ஜெட் படங்கள், மொழி மாற்று படங்கள் இந்த வாரம் வரும் என்று சம்பந்தபட்ட தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் எந்த படமும் தியேட்டரில் படம் பார்க்க விரும்பும் ரசிகனை அழைத்து வரும் சக்திமிக்க படமாக இல்லை.

திரையரங்குகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’ வரும் செப்டம்பர் 10ஆம் தேதியன்று வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங், பிருந்தா பிரசாத் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இயக்குநர் ஏ.எல்.விஜய் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழ்ப் பதிப்புக்கு மதன் கார்க்கியும், இந்திக்கு ரஜத் அரோராவும் வசனம் எழுதியுள்ளனர்.

இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்குத் தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் படம் கடந்த வருடமே வெளியீட்டுக்குத் தயாராக இருந்தும் கொரோனா தொற்று, லாக் டவுன் போன்ற காரணங்களால் படத்தை வெளியிட முடியாமல் போனது.

ஆனாலும், பிரம்மாண்டமான செலவில் உருவாகியுள்ள இந்தத் தலைவி படத்தை திரையரங்குகளில்தான் வெளியிட வேண்டும் என்பதில் படக் குழுவினர் உறுதியாக இருந்தனர்.

காரணம் ஜெயலலிதாவின் திரையுலக வாழ்க்கை மட்டுமல்ல அவரது அரசியல் வாழ்க்கையின் ஒரு பகுதி தலைவி படத்தில் கூறப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் எல்லோரும் எதிர்பார்க்கும் படமாக தலைவி படம் உள்ளது

வரும் செப்டம்பர் 10ம் தேதி ‘தலைவி’ திரைப்படம் வெளியாகும் என்று புதிய போஸ்டரைபடக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்

திரையரங்குகளுக்கு மக்களை மீண்டும் அழைத்து வரும் படமாக தலைவி இருக்கும் என்று விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

புதன் 25 ஆக 2021