மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

ரகசியங்களை வெளியிட தயாராகும் எஸ்.ஏ.சி

ரகசியங்களை வெளியிட தயாராகும் எஸ்.ஏ.சி

விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் 75 வயதைக் கடந்தாலும் திரைப்படத்துறையில் அவரது செயல்பாடுகள் இன்றைய தலைமுறைகளுடன் போட்டிப்போடுவதாகவே உள்ளது. ஊடகத்துறையில் முகநூல், யூடியூப் இவை இரண்டும் தனி நபர் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை வெளியிடும் தளமாக மாறிவருகிறது. இதனைப் பயன்படுத்தும் முடிவுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வந்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரோனாவால் சினிமா உலகமே இருண்டு விட்டது. என்னை நான் எப்போதுமே புத்துயிராக வைத்துக் கொள்ள சினிமா மூலம் உங்களுடன் பேசி வந்த நான், இனி யூடியூப் சேனல் மூலம் பேச உள்ளேன். இதுவரை 70 படத்தை இயக்கியுள்ளேன். பலரை அறிமுகப்படுத்தியுள்ளேன். சாதிக்க நினைக்க உள்ள இளைஞர்களுக்கு என் வாழ்க்கை பாடமாக இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த முயற்சி. பல உண்மைகளை உடைத்துச் சொல்லப்போகிறேன்.

திரை துறைமூலம் கிடைத்த பிரபலத்தை இன்றைக்கு யூடியூப் சேனல் வளர்ச்சி அதன் மூலம் வருமானத்தை அடைய இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் இயக்குநரும், நடிகருமான மனோபாலா தான் முதன்முதலில் யூடியூப் சேனலை தொடங்கினார். அவரை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா, சித்ரா லட்சுமணன் தொடங்கினார்கள்.நடிகர், நடிகைகளில் பெரும்பான்மையோர் யுடியூப் வாய்க்காலைப் பகுதி நேரத் தொழிலாக நடத்தத் தொடங்கியுள்ளனர்

நான் பேசுவது அனைத்தையும் ஊடகங்கள் வெளியிடுவது இல்லை எனது திரையுலக வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை ஆவணப்படுத்த விரும்புகிறேன். இதன்மூலம் சினிமாவில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். அதனாலேயே இந்த முயற்சி பணம் சம்பாதிப்பதற்காக நான் யூடியூப் சேனலை தொடங்கவில்லை” என்றார்.

-இராமானுஜம்

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

செவ்வாய் 24 ஆக 2021