மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

விமர்சனத்தை ஏற்படுத்திய சமந்தாவுக்கான கேக் கொண்டாட்டம்!

விமர்சனத்தை ஏற்படுத்திய சமந்தாவுக்கான கேக் கொண்டாட்டம்!

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. அனிருத் இசையில் உருவாகிவரும் இந்தப் படம், நானும் ரவுடி தான் பட ஸ்டைலில் ரொமாண்டிக் காமெடி ஜானரில் படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. சமீபத்தில்கூட, வளையோசை பாடலை ரீமிக்ஸ் செய்யும் படப்பிடிப்புக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைலரானது.

இந்த நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி உட்பட படக்குழுவினர் சமந்தாவுக்கு கேக் வெட்டி கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் எதிர்ப்புக்குரலை சம்பாதித்து வருகிறது.

அது என்னவென்றால், பாலிவுட்டில் வெளியாகி தமிழர்களின் பெரும் எதிர்ப்புகளுக்கு நடுவே வெளியான வெப் சீரிஸ் ‘தி பேமிலி மேன் 2’. ராஜ் & டிகே இயக்கியிருக்கும் இந்த வெப் சீரிஸில் மனோஜ் பாஜ்பாய் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் தமிழீழ போராளிகள் தீவிரவாதிகளாக சித்திரிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில், தமிழீழப் போராளியாக சமந்தா நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் வெளியான நேரத்திலேயே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ் மக்கள் இந்த வெப் சீரிஸைப் புறக்கணித்தனர்.

அதோடு, ராஜ் & டிகே இயக்கத்தில் தற்போது விஜய் சேதுபதி நடித்துவருவதும் விமர்சனத்துக்குள் உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில், மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா கொரோனா காரணமாக இணையம் வழியாக நடத்தப்பட்டது. அதில், சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த திரைப்படமாக ‘சூரரைப் போற்று’ படமும் தேர்வானது. அதுபோல, சிறந்த நடிகையாக தி பேமிலி மேன் சீரிஸுக்காக சமந்தா தேர்வாகியுள்ளார்.

மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது சமந்தாவுக்குக் கிடைத்திருப்பதால் காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கேக் வெட்டிக் கொண்டாடினர். இச்செயல் தமிழ் மக்களை நோகடிக்கும் விதமாக இருப்பதாக தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான சித்திரிக்கப்பட்ட கதைக்களத்தில் சமந்தா நடித்ததற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது. தற்போது, அதற்கு விருது கிடைப்பதால் விஜய் சேதுபதியும், நயன்தாராவும் மக்களுக்கு எதிரான ஒன்றுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கலாமா எனும் கேள்வியை இணையத்தில் தமிழ் உணர்வாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 24 ஆக 2021