மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

திரைப்படங்களுக்கு மானியம் வேண்டும்: முரளி ராமநாராயணன்

திரைப்படங்களுக்கு மானியம் வேண்டும்: முரளி ராமநாராயணன்

திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மானிய தொகை வழங்க வேண்டும் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி ராமநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை... 'தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்றியமைக்க உழைத்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திரை உலகை காக்கும் வகையில் திரையரங்குகளைத் திறந்து ஐம்பது சதவிகிதம் இருக்கைகளுடன் இயக்குவதற்கு ஆணை பிறப்பித்துள்ளார். தமிழகமெங்கும் உள்ள திரையுலக ரசிகர்கள் சிறிது இடைவெளிக்கு பிறகு திரையரங்கை நோக்கி வர இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக முதல்வர் அவர்களுக்கு தமிழ்த் திரை உலகின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்

மேலும், முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... குறைந்த முதலீட்டில் தயாரித்து வெளியிட்டுள்ள திரைப்படங்களுக்கான மானியத் தொகைக்கு அரசாங்கத்திற்கு விண்ணப்பித்துள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மானிய தொகையினை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வாழ வைக்க வேண்டுமாய் இருகரம் குவித்து கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

நடப்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த இரண்டு ஆண்டுகளை திரையுலகின் கறுப்பு நாட்களாக்கி விட்டது இந்த கொரோனா. படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள் வெளியீடு என எல்லாம் பெருமளவில் முடங்கிவிட்டன.

நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக்குறியோடு நகர்ந்த நாட்களில் இப்போது திரையரங்குகளை 23.8.2021 முதல் 50% இருக்கைகளோடு திறந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் விதைக்கிறது.

ஆக்கிரமித்திருக்கும் நோய் விலகி, பல புதிய திரைப்படங்கள் வெளியாகி, திரையரங்குகள் முழுமையான திருவிழாக் கோலம் காண காத்திருக்கிறோம்.

திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவைத்த ஓர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 24 ஆக 2021