மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஆக 2021

முதலிடத்தில் வலிமை... இரண்டாவது மாஸ்டர் !

முதலிடத்தில் வலிமை... இரண்டாவது மாஸ்டர் !

மில்லினிய யுகத்தில் இருக்கிறோம். மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் ஆளுமை நிறைந்திருக்கிறது. உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் சோசியல் மீடியாவின் மூலமாக எளிதில் தெரிந்துகொள்கிறோம். குறிப்பாக, செய்திகள் முதலில் பிரேக் அவுட் ஆவது ட்விட்டரில் தான். இன்று ஹேஷ்டேக் தினமென்பதால் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் ட்விட்டரில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட டாப் 10 ஹேஷ்டேக் பட்டியலினை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ட்விட்டரில் அதிகளவில் டிரெண்டான ஹேஷ்டேக்குகளில் முதலிடத்தை வலிமை பெற்றுள்ளது. அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்ததால், ட்விட்டரில் அடிக்கடி வலிமை படம் குறித்த கலந்துரையாடல்கள் நீளும். அதனால், இந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் அதிகம் பேசப்பட்ட டாபிக் வலிமை.

வலிமையைத் தொடர்ந்து ட்விட்டரில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் மாஸ்டர் இடம்பெற்றுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் மாஸ்டர். இந்த வருட பொங்கலுக்கு திரையரங்கில் வெளியானது. விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க, நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இந்தப் படம் திரையரங்கில் வெளியாகி செம ஹிட். பட ரிலீஸின் காரணமாக தொடர்ச்சியாக மாஸ்டர் ஹேஷ்டேக் டிரெண்டானது.

வலிமை மற்றும் மாஸ்டரைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடிப்பில் உருவாகிவரும் சர்க்காரு வாரிபாட்டா படம் பெற்றுள்ளது. பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு, கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் தெலுங்கு படம் இது. இந்தப் படத்தின் டீஸர் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதனால், இந்தப் படத்தின் ஹேஷ்டேக்கும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுபோல, ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளில் நான்காவது இடத்தில் ‘அஜித்குமார்’ மற்றும் ஐந்தாவது இடத்தில் ‘தளபதி65’ உள்ளிட்ட ஷேஷ்டேக்குகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, பத்தாவது இடத்தில் வக்கீல்சாப் ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது. அஜித் நடித்து ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான படம் ‘நேர்கொண்டப் பார்வை’ இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் ‘வக்கீல் சாப்’. தமிழில் அஜித் நடித்த ரோலில் தெலுங்கில் பவன்கல்யாண் நடித்திருந்தார். நிவேதா தாமஸ், அஞ்சலி & அனன்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஏப்ரல் 09ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் தெலுக்கில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பதால் இந்தப் படத்தின் ஹேஷ்டேக்கும் அதிகமாக மக்களால் பயன்படுத்தப்பட்டது.

- ஆதினி

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

திங்கள் 23 ஆக 2021