மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஆக 2021

தியேட்டர் சேதிகள்: அப்டேட் குமாரு

தியேட்டர் சேதிகள்: அப்டேட் குமாரு

தியேட்டர்கள் திறப்பு ரசிகர்கள் மகிழ்ச்சினு காலையில செய்தி வருது. திறந்த தியேட்டர்களில் புதுப்பட ரீலீஸ் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம்னு மதியானம் செய்தி வருது. திறந்த தியேட்டர்களில் போட்ட பழைய படமும் நன்றாக இல்லைனு சாயந்தரம் செய்தி வருது. தியேட்டர்கள் ரொம்ப மாசமா தெறக்கப்படாததால் மூட்டைப் பூச்சிகள் பெருகிவிட்டதுனு நைட் செய்தி வருது. என்னதான்டா செய்யச் சொல்றீங்க...

நீங்க அப்டேட் பாருங்க

amudu

தமிழக அரசின் செயல்பாட்டை 100 நாளில் தீர்மானிக்க முடியாது. -ப.சிதம்பரம்.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்குப்படும் இடங்களைப் பொறுத்து தான் தீர்மானிக்க முடியும்ங்களா.

கோழியின் கிறுக்கல்!

மற்றவருக்கு புரிய வைக்க முயற்சித்தே நம்மின் பாதி ஆயுள் போய் விடுகிறது!!

பிறகு எப்பொழுது வாழ்வதாம்!?

பர்வீன் யூனுஸ்

நிறைய கெட்அப்களில் நடித்தால் அது கமல். நிறைய கெட்அப்களில் தோன்றினால் அது 'ஜீ'

amudu

சிலிண்டர் விலையை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. -பழனிவேல் தியாகராஜன்.

சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் அதிகாரம் உங்க கிட்ட தானே இருக்கு.

Mannar & company

பெட்ரோல் விலை, பிபி சுகர் ஏறினாக்கூட வராத பதற்றம், அம்மா வீட்டுக்குப் போன மனைவி ஒருநாள் முன்பே வரும்போது வந்துவிடுகிறது!

balebalu

'தலை' க்கு மேல வேலை இருக்கு என்றபடியே அவசரமாக நடந்தார் முடி வெட்டுபவர்

மெத்த வீட்டான்

மொபைல் நம்பர் மிஸ் ஆகிடுச்சு என்பது இப்ப அனைவராலும் சொல்லப்படும் பொய் !

நெல்லை அண்ணாச்சி

இன்னும் திருமண நாளை இனிப்பு கொடுத்து கொண்டாடும் அதிசய பிறவிகள் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வியப்பாகத் தான் இருக்கிறது!!

PrabuG

இந்திய பொருளாதார வளர்ச்சியில் வடமாநிலத்தவர் பங்கு அதிகம் - வானதி சீனிவாசன்.

ரயில்ல கூட டிக்கெட் எடுக்க மாட்டானுங்க. அவங்களால வளர்ச்சியாம். போவியா..

ச ப் பா ணி

ஒன்பது மணிக்குள் ஆபிஸ் போவது என்பது..செத்து செத்து பிழைக்கும் டாஸ்க்

தர்மஅடி தர்மலிங்கம்

தமிழக நிதிநிலை அறிக்கை என்பது வெற்று அறிக்கைதான்– ஓ.பன்னீர்செல்வம்!

அப்போ.. முன்னால் அமைச்சர்களின் சொத்து அறிக்கை தான் கெத்து அறிக்கையோ..?

மயக்குநன்

2027-ல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்த வாய்ப்பு!- ஐ.நா. அறிக்கையில் தகவல்.

இதைத்தான் 'புதிய இந்தியா' பொறக்கப் போவுது, பொறக்கப் போவுதுனு சொல்லிட்டுத் திரியறாங்களா..?!

தர்மஅடி தர்மலிங்கம்

கொரோனா 3-வது அலையை சமாளிக்க மத்திய அரசு தயார்: அனுராக் தாகூர்

அப்போ... 3-வது அலையை தடுக்க தயாரா இல்லை..??

சரவணன். ℳ

தேர்தலில் வெற்றி பெற வைத்ததற்காக தமிழகத்தில் 4 பா.ஜ.க மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசளிப்பு!

நியாயமா பார்த்தா இதை அதிமுகவினருக்கு கொடுத்து இருக்கணும்...!

கோழியின் கிறுக்கல்!!

முகம் தெரியாதவரின் பதிவு நம் மனதுக்கு ஆறுதல் தருவது தான் கீச்சுலகின் சிறப்பு!!

-லாக் ஆஃப்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

திங்கள் 23 ஆக 2021