மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஆக 2021

ஷங்கர் பட வாய்ப்பை இழந்த பிரபல நாயகி!

ஷங்கர் பட வாய்ப்பை இழந்த பிரபல நாயகி!

ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்க இருக்கிறார். இந்திய சினிமாவாக பான் இந்தியா ரிலீஸாக இப்படம் உருவாகிவருகிறது.

ராம்சரணின் 15வது படமான இதில், இரண்டு ரோல்களில் இவர் நடிக்க இருக்கிறாராம். இதற்கு முன்பாக, மஹதீரா & நாயக் படங்களில் இரட்டை ரோல்களில் ராம்சரண் நடித்திருந்தார். நமக்குக் கிடைத்த தகவல்படி, தந்தை, மகன் என இரண்டு ரோல்களில் வர இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் கொரியன் சிங்கர் சூஷி பே முக்கிய லீடில் நடிக்க இருக்கிறார். அதோடு, படத்தில் நாயகியாக அலியாபட், கியாரா அத்வானி , மாளவிகா மோகனன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியா முழுவதும் படம் வெளியாக இருப்பதால் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரிட்சயமான நாயகியாக வேண்டுமென படக்குழு விரும்பியது. இறுதியாக, க்யாரா அத்வானி நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கூடுதலாக, இன்னொரு நாயகியும் படம் இருக்கிறார். முதலில், இந்த ரோலுக்கு தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இப்போதைக்கு, தெலுங்கின் டிரெண்டிங் நடிகை இவர். அதிகம் தேடப்படும் இவரை, ஷங்கர் படத்தில் நடிக்கவைக்க விரும்பினார் தில்ராஜூ. ஆனால், பெரும் தொகையை சம்பளமாகக் கேட்டிருக்கிறார் ராஷ்மிகா. அதோடு, சில கண்டிஷன்களும் போட்டதாகத் தெரிகிறது. இதனால், டென்ஷனாக இயக்குநர் ஷங்கர், ராஷ்மிகாவை நிராகரித்துவிட்டாராம்.

பின்னர், ராஷ்மிகா ரோலுக்கு நடிகை அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. ராஷ்மிகா கேட்கும் பெரும் தொகையை அஞ்சலி சம்பளமாகக் கேட்கமாட்டார். அதோடு, இயக்குநருக்கான ஆர்டிஸ்ட் அஞ்சலி. அதனால், தைரியமாக அஞ்சலியை படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

தமன் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஏழு முதல் எட்டு மாதத்துக்குள் முடித்துவிடவும் திட்டமாம்.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 23 ஆக 2021