மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஆக 2021

விக்ரமில் வில்லனான விஜய்சேதுபதிக்கும் ஹீரோயின் !

விக்ரமில் வில்லனான விஜய்சேதுபதிக்கும்  ஹீரோயின் !

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விஸ்வரூபம் II. இப்படம் 2018ல் வெளியானது. இப்படத்துக்குப் பிறகு, கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ துவங்கியது. ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டது. அதற்குள் லைகாவுக்கும் ஷங்கருக்கும் ஏற்பட்ட மோதலால் படம் பாதியில் நிற்கிறது.

ஷங்கரும் ராம்சரண் படத்தில் கவனம் செலுத்தச் சென்றுவிட்டார். கமல்ஹாசனும் புதியப் படத்தைத் துவங்கிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்க இவர் நடிக்க உருவாகிவரும் படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையில் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு காரைக்குடியில் இந்த வாரம் துவங்குகிறது.

லோகேஷ் கனகராஜின் கதை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். கமர்ஷியல் கதைக்குள் புதிதாக ஒரு வெரைட்டியைக் கொடுத்துக் கொண்டிருப்பார். அப்படி, இந்தப் படத்தில் ஓய்வுப் பெற்ற போலீஸ் அதிகாரியாக கமல்ஹாசன் நடித்திருக்கிறார். மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் விஞ்ஞானியாக படத்தில் வருகிறாராம். அதோடு, முழுநேர வில்லனாக விஜய்சேதுபதி வருவார் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடி கிடையாது என்றே முதலில் சொல்லப்பட்டது. இந்நிலையில் , விஜய்சேதுபதிக்கும் படத்தில் நாயகி இருக்கிறாராம். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் ஷிவாங்கி நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, லோகேஷ் கனகராஜின் மாஸ்டரில் நடித்த ஆண்ட்ரியா, விக்ரம் படத்தில் இடம் பெறவும் வாய்ப்பு அதிகம் என்றும் ஒரு தகவல்.

விக்ரம் முடிந்த கையோடு, பாபநாசம் 2 & இந்தியன் 2 படங்களையும் முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார் கமல்ஹாசன்.

- ஆதினி

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

திங்கள் 23 ஆக 2021