மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

திரைப்படமாகும் ஊரடங்கு அனுபவம்!

திரைப்படமாகும் ஊரடங்கு அனுபவம்!

கொரோனா காலத்தில் அதைக் கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடி, துன்பத்துக்கு ஆளானார்கள். இதை மையக்கருவாக வைத்து பல்வேறு திரைக்கதைகள் தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்டுள்ளன

இவற்றில் சில திரைக்கதைகள் திரைப்படமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் லாக்டவுன் என்ற படம் தயாராகி வருகிறது. இதில் புதுமுகங்கள் நடித்து வருகின்றனர்.

அங்கிதா புரொடக்‌ஷன் சார்பில் எஸ்.முரளி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில் படம் உருவாகிறது. அமித் ஜாலி கதாநாயகனாகவும், கதாநாயகியாக கீதாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் சுந்தரம் மாஸ்டர், பிரகாஷ் ராஜ், நேஹா சக்சேனா, துளசி, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஜாசி கிப்ட் இசையமைக்கிறார். பி.கே.ஹெச்.தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், கன்னடத்தில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் பெங்களூரில் நடந்து வருகிறது.

-இராமானுஜம்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

ஞாயிறு 22 ஆக 2021