மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

அபராத தொகை: ஏழை மாணவர்களுக்கு உதவும் விஷால்

அபராத தொகை: ஏழை மாணவர்களுக்கு உதவும் விஷால்

புதுமுகம் ஆனந்தன் இயக்கத்தில் உருவான சக்ரா படத்தில் விஷால் நடித்திருந்தார். விஷால் பிலிம் பேக்டரி இந்தத் திரைப்படத்தைத் தயாரித்தது.

இந்தப் படத்துக்குக் கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக விஷால் மீது லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் விஷால் மீது பொய் வழக்கு தொடர்ந்ததாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் லைகா நிறுவனத்துக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

இதுகுறித்து விஷால் தனது ட்விட்டரில், "நீதி வெல்லும் மற்றும் உண்மை வெல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். லைகா நிறுவனம் எனக்கு எதிராகவும் 'சக்ரா' திரைப்படத்துக்கு எதிராகவும் தாக்கல் செய்த வழக்கு, பொய் வழக்கு என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் ஒரு பொய்யான வழக்கை முன்வைத்து என் மீது குற்றம் சாட்டியதற்காக லைகா நிறுவனத்துக்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார். இதற்காக ஐந்து லட்ச ரூபாய் வழக்கு செலவாக லைகா நிறுவனம் விஷாலுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

"தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் ஏழை மாணவ மாணவிகளுக்குக் கல்வி உதவிகள் வழங்கி வருகிறேன். தற்போது கோர்ட்டு விதித்த அபராத தொகையான ஐந்து லட்சம் ரூபாய் எனக்குக் கிடைக்க உள்ளது. இந்த ஐந்து லட்ச ரூபாயை தேவி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ மாணவியரின் படிப்பு செலவுக்கு முழுமையாக வழங்குவேன்" எனத் தெரிவித்துள்ளார்

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

ஞாயிறு 22 ஆக 2021