மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

கே.ஜி.எஃப் ரிலீஸ் எப்போது?

கே.ஜி.எஃப் ரிலீஸ் எப்போது?

கோலார் தங்க சுரங்கத்தை ராக்கி எப்படி கைப்பற்றினான் என்பதை தெரிந்து கொள்ள வெறித்தன வெயிட்டிங்கில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில், கே.ஜி.எஃப் சேப்டர் 2-வின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடித்து மாபெரும் ஹிட்டான படம் `கே.ஜி.எஃப்'. கடந்த டிசம்பர் 2018-ல் வெளியான இப்படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு நிழல்கள் ரவியின் குரல் மிகப்பெரிய பலமாக அமைந்தது. கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் படமும் மிகப்பெரியளவில் ஹிட்டானது. இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது.

சுமார் 120 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் யஷ் உடன், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படமானது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து ரிலீஸூக்கானப் பணிகள் நடந்துவருகிறது. பெரும் பட்ஜெட்டில் உருவாகியிருப்பதால் நிச்சயம் திரையரங்கில் தான் படம் வெளியாகும் என்பதில் மாற்றம் இல்லை. அதற்கான வியாபாரம் கூட முடிந்துவிட்டது. தமிழில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் கே.ஜி.எஃப் சேப்டர் 2 படமானது கடந்த ஜூலை 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் திறக்க முடியாத சூழல் காரணமாக படம் வெளியாகவில்லை. இந்நிலையில், எப்போது ரிலீஸாகும் என அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர். தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கே.ஜி.எஃப் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

புதிய திருப்பமாக, யஷ் நடிக்கும் ஜே.ஜி.எஃப் படமானது அடுத்த வருட ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாகும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. ஆக, ராக்கியின் ஆக்‌ஷனைப் பார்க்க அடுத்த வருடம் வரை காத்திருந்து தான் ஆக வேண்டும். அதுவரை கலர்ஸ் டிவியில் வாரம் ஒருமுறையாவது கே.ஜி.எஃப் சேப்டர் 1 போட்டுவிடுவார்கள். அதைமட்டும் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

சமீபத்தில்,கே.ஜி.எஃப் சேப்டர் 2 ஆனது வருகிற செப்டம்பர் 09ஆம் தேதி வெளியாகலாம் என்று செய்தி வெளியானது. இந்த தேதியையும் படக்குழு பரிசீலினை செய்து பார்த்ததாம். இந்தியா முழுவதும் திரையரங்குகள் திறந்தால் மட்டுமே ரிலீஸ் சாத்தியம். பெரும் பட்ஜெட்டில் உருவாகும் படமென்பதால் ஒரு மொழியில் வெளியிட்டுவிட்டு, பிற மொழிகளில் தாமதமாக வெளியிட முடியாது. அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானால் மட்டுமே படத்தின் மூலம் தயாரிப்பாளர் லாபம் பார்க்க முடியும்.

அடுத்த ஏப்ரலுக்குள் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் எனவும், திரையரங்குகள் இந்தியா முழுவதும் திறக்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பும் என முழுமையாக நம்புகிறதாம் கே.ஜி.எஃப் டீம். அவர்களின் நம்பிக்கை நிஜமானால் நன்றாக இருக்கும்.

- ஆதினி

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

ஞாயிறு 22 ஆக 2021