மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

மாஸ்டர் ரீமேக்கை சல்மான்கான் நிராகரிக்கக் காரணம்!

மாஸ்டர் ரீமேக்கை சல்மான்கான் நிராகரிக்கக் காரணம்!

மாநகரம், கைதி படங்களின் மூலம் எதிர்பார்ப்பை எகிற விட்ட லோகேஷ் கனகராஜின் அடுத்த பாய்ச்சலாக இருந்தது மாஸ்டர்.

ஹீரோவாக விஜய், வில்லனாக விஜய் சேதுபதி என புது காம்போவுடன் சிக்ஸர் விலாசினார் லோகேஷ். இவர்களுடன் மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஜய் ரசிகர்கள் மட்டுல்லாம எல்லாருமே ரசிக்கிற வகையில் மாஸ்டர் படம் இருந்தது.

தியேட்டரில் ரிலீஸானது மட்டுமின்றி, ஓடிடியிலும் வெளியாகி இந்தியா முழுவதும் பெரிய வெற்றியைப் பெற்றது மாஸ்டர். விஜய்க்கு மாஸ்டர் இயக்கியவருக்கு அடுத்த வாய்ப்பு கமல்ஹாசனிடம் இருந்து வந்தது. கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் இயக்கும் படமானது ‘விக்ரம்’ எனும் பெயருடன் துவங்கி நடந்துவருகிறது.

லோகேஷினின் முதல் படமான மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான ‘மும்பைகர்’ படம் தயாராகிவருகிறது. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் பணிகளும் சமீபத்தில் துவங்கியது. விஜய் நடித்த மாஸ்டர் படம் இந்தியில் டப் செய்து வெளியானது நினைவிருக்கலாம். இருப்பினும், நேரடி ரீமேக் படமொன்றை விரும்பியது பாலிவுட் சினிமா. அதனால், விஜய் ரோலில் நடிக்க சல்மான் கான் ஒப்பந்தமானார்.

சல்மான் கானுக்காகத் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்கப்பட்டதாவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் மாஸ்டர் படத்திலிருந்து சல்மான்கான் விலகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குச் சொல்லப்படும் காரணம் தமிழ் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மாஸ்டர் படத்தின் திரைக்கதை அந்த அளவுக்குத் திருப்திகரமாக இல்லையென்று மாஸ்டர் ரீமேக்கிலிருந்து சல்மான்கான் விலகியிருக்கிறாராம். இதனால், மாஸ்டர் இந்தி ரீமேக் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சல்மான் கான் நடித்து கடைசியாக வெளியான படம் ‘ராதே’. நடிகர் பிரபுதேவா இயக்கியிருந்த இப்படம் படு தோல்வி. இந்நிலையில், மாஸ்டர் படத்தை நிராகரித்திருக்கிறார் சல்மான்கான்.

- ஆதினி

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

ஞாயிறு 22 ஆக 2021