மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

அட்லீ - ஷாரூக் படத்துக்குள் வந்த அனிருத் : சுவாரஸ்ய பின்னணி !

அட்லீ - ஷாரூக் படத்துக்குள் வந்த அனிருத் : சுவாரஸ்ய பின்னணி !

தெறி, மெர்சல் & பிகில் படங்களை விஜய்க்கு இயக்கிய அட்லீ, அடுத்தக் கட்டமாக ஷாரூக்கான் படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். மும்பையில் முகாமிட்டிருக்கிறார் அட்லீ.

ஷாரூக் நடிப்பதோடு, அவரின் ரெட்சில்லீஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்கவும் செய்கிறார். இந்தப் படம் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்தி இணையத்தில் வட்டமிட்டப்படி இருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எப்படியும், இந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிடும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தில் ஷாரூக் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல். அதோடு, மற்றுமொரு பெண் லீட் ரோலுக்கு பாலிவுட் நடிகையான தங்கல் படத்தில் நடித்த தான்யா மல்கோத்ரா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்தப் படத்தின் அறிவிப்புக்கென தனி டீஸர் வீடியோ ஒன்றை தயார் செய்து வருகிறது அட்லீ & கோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்துக்கு எப்படி அறிமுக டீசர் வெளியானதோ, அதுபோல ஒரு வீடியோவை உருவாக்கி பிரம்மாண்டமாக அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இந்த டீஸர் வீடியோவுக்கான இசைக்கு அனிருத் பணியாற்றியிருக்கிறார்.

ஷாரூக் - அட்லீ படத்தில் முத்துராஜ் கலை இயக்கம், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்று சொல்லப்பட்டுவருகிறது. இந்நிலையில், டீசர் வீடியோவில் அனிருத்தின் இசை ஷாரூக் கவனத்தை ஈர்த்ததாகச் சொல்லப்படுகிறது.

டீஸருக்கான இசை யுனிக்காக இருப்பதாகவும் ஷாரூக் கூறியிருக்கிறார். அதனால், ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பதிலாக அனிருத் இந்தப் படத்தில் இசையமைப்பாளராகத் தொடர்வார் என்று சொல்லப்படுகிறது.

கூடுதல் செய்தியாக, இந்தப் படத்தில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஏராளமானோர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதைத்தான் ஷாரூக்கும் விரும்புகிறாராம். பாலிவுட்டுக்கு அட்லீ படம் இயக்கச் சென்றாலும், தாய் மொழியினர் உடன் இருந்தால் சுதந்திரமாக செயல்பட முடியும். அதனால், தான் இந்த திட்டமாம். அட்லீ இயக்க ஷாரூக் நடிக்கும் படமானது 200 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் ஒரு தகவல்.

- தீரன்

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

3 நிமிட வாசிப்பு

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

ஞாயிறு 22 ஆக 2021