மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

ரஜினி, விஜய்யை இயக்குவதில் தேசிங்கு பெரியசாமிக்கு சிக்கலா?

ரஜினி, விஜய்யை இயக்குவதில் தேசிங்கு பெரியசாமிக்கு  சிக்கலா?

துல்கர்சல்மான், கெளதம் மேனன், ரித்துவர்மா நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்குநராக அறிமுகமான படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி வெளியாகி, பின்னர் பெரிய ஹிட்டானது. இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தேசிங்கு பெரியசாமியை வீட்டிற்கு அழைத்து வாழ்த்து கூறினார் நடிகர் ரஜினிகாந்த். அதோடு, 'தனக்கும் ஒரு கதை இருந்தால் தயார் செய்யுங்கள்' என்று கூறினார். இந்த தகவல்கள் அந்த நேரத்தில் செம வைரலானது.

சிவா இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நவம்பர் 4ஆம் தேதிக்கு தீபாவளி ரிலீஸாக படம் வெளியாகிறது. அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

ரஜினியைச் சந்தித்துக் கதையைக் கூறிவிட்டதாகவும், படத்துக்கான சரியான தயாரிப்பாளரை முடிவு செய்ததிலும் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

நிற்க, விஜய் நடிப்பில் 65வது படமாக பீஸ்ட் உருவாகிவருகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்க விஜய் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு, அதாவது விஜய் 67வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக ஒரு தகவல். சமீபத்தில் விஜய்யையும் சந்தித்து ஒரு ஒன்லைன் கூறியிருக்கிறார் தேசிங்கு.

ரஜினியின் அடுத்தப் படம், விஜய்யின் அடுத்தப் படத்துக்கு அடுத்தப் படம் என தேசிங்கு கமிட்டானாலும், இடையே ஒரு சிக்கலும் நடந்துவருகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை முடித்த கையோடு, பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் அடுத்தப் படத்துக்காக 35 லட்சம் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார் தேசிங்கு.

தற்பொழுது, அந்த தயாரிப்பாளர் ரஜினி அல்லது விஜய் யாரென்றாலும் பரவாயில்லை. உங்களின் அடுத்தப் படத்தின் தயாரிப்பாளர் நானாகத் தான் இருக்க வேண்டுமென கரார் காட்டுகிறாராம். அதனால், தேசிங்கு செம ஷாக். கொடுத்தப் பணத்தை வட்டியுடன் தந்துவிடுவதாகவும் அந்தத் தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார் தேசிங்கு. ‘பணத்தை விடுங்க, உங்க அடுத்தப் படத்தை நான் தான் தயாரிப்பேன்’ என அடம் பிடிக்கிறாராம். இந்தக் கதை எப்படி முடியப் போகிறதோ என்று தெரியவில்லை.

- தீரன்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

சனி 21 ஆக 2021