தியேட்டரில் வெளியாகும் அண்ணாத்த, வலிமை!

entertainment

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக ஏப்ரல் மாதக் கடைசியில் இருந்து தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதனால், சில தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களைத் தியேட்டர்களில் வெளியிடுவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள். தற்போதைய நிலவரப்படி சில படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட நிறுவனங்கள் வாங்கியுள்ளது. ஓடிடி வேண்டாம், அல்லது ஓடிடியில் நல்ல விலை கிடைக்கவில்லை என்ற காரணங்களால் சில படங்கள் தியேட்டர்களில் வெளியிட வேண்டிய நிலையில் உள்ளது .

இருந்தாலும் கடந்த காலங்களை போன்று வாரத்திற்கு நான்கைந்து படங்கள் வெளிவருவதற்கான வாய்ப்பில்லை என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

தியேட்டர்கள் திறக்கப்பட்டால் எப்படியான படங்கள் வெளிவரும் எனத் திரையுலகினரிடம் விசாரித்த போது ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’, அஜித் நடித்துள்ள ‘வலிமை’ ஆகிய இரண்டு படங்கள் தான் தியேட்டர்களுக்கு பார்வையாளர்களை அழைத்து வரும்படங்களாக இருக்கும் என்கின்றனர்.

திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் பெரும்பான்மையான பார்வையாளர்கள் இன்னும் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, போதிய வருமானமின்மையில் இருந்து முழுமையாக மீண்டு வரவில்லை. குழந்தைகளின் படிப்பு செலவு, பெட்ரோல், சமையல் எரிவாயு இவற்றின் விலையேற்றம் என தங்கள் இயல்பு வாழ்க்கையில் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதனால், தற்போதைக்கு அவர்களால் உடனடியாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பணம் செலவு செய்யும் நிலை உருவாகி தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவார்கள் என்பது சந்தேகம்தான். அந்த கூடுதல் செலவைத் தற்போது தவிர்க்கவே பார்ப்பார்கள்.

இருப்பினும் சினிமா தியேட்டர்களுக்கு வந்து படங்களைப் பார்ப்பதுதான் கொண்டாட்டம் என நினைக்கும் தீவிர ரசிகர்களை நம்பித்தான் ‘அண்ணாத்த, வலிமை’ ஆகிய படங்கள் உள்ளன. இருப்பினும் தியேட்டர்களைத் திறந்தால் நிறைய தியேட்டர்களில் தங்களது படங்களை வெளியிட வாய்ப்பிருக்கும் என நினைக்கும் சில தயாரிப்பாளர்கள் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *