மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

‘சியான் 60’ படத்துக்கு ‘மகான்’ டைட்டில் வந்த கதை!

‘சியான் 60’ படத்துக்கு ‘மகான்’ டைட்டில் வந்த கதை!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்க ’சியான் 60’ படம் உருவாகிவருகிறது. விக்ரமுடன் சிம்ரனும், வாணி போஜன் மற்றும் பாபி சிம்ஹா லீட் ரோல்களில் நடித்திருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரியாகத் துருவ் வருகிறார். தவிர, இந்தப் படத்தில் துருவ் நடிக்க, கேங்க்ஸ்டராக வில்லத்தனம் காட்டுகிறாராம் விக்ரம். சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்துவருகிறார். இந்தப் படத்தை மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் லலித் தயாரிப்பில் மூன்று கெட்டப்புகளில் விக்ரம் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

விக்ரமின் 60வது படமென்பதால் ‘சியான் 60’ என தற்காலிகமாக அழைக்கப்பட்டது. தற்பொழுது, இந்தப் படத்துக்கு ‘மகான்’ எனும் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகான் தலைப்பு கொஞ்சம் காஸ்ட்லியானது என்றால் நம்புவீர்களா? அதுதான் நிஜம்.

விக்ரம் படத்துக்கு மகான் எனும் டைட்டிலை படக்குழு பேசி உறுதி செய்ததும், டைட்டிலை பதிவு செய்ய சென்றிருக்கிறார்கள். ஆனால், ஏற்கெனவே, ஒரு தயாரிப்பாளர் இந்த டைட்டிலை பதிவு செய்திருந்தது கார்த்திக் சுப்பராஜூக்குத் தெரியவந்துள்ளது. இந்தப் படத்தின் கதைப்படி, ‘மகான்’ எனும் டைட்டில் கச்சிதமாகப் பொருந்தும் என்பதால் தலைப்பை மாற்றுவதில் படக்குழுவுக்கு விருப்பமில்லையாம்.

உடனடியாக, அந்தத் தயாரிப்பாளரை சியான் 60 படக்குழு தொடர்புகொண்டு பேசியிருக்கிறது. அந்த தயாரிப்பாளர் பெரும் தொகையை டைட்டிலுக்காகக் கேட்டிருக்கிறார். இறுதியாக, இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி, மகான் டைட்டிலை ஏழு லட்சத்துக்கு வாங்கியிருக்கிறார்கள். படத்துக்காக எக்கச்சக்க செலவுகள், இதில் ஏழு லட்சத்தை பெரிதாக நினைக்கவில்லையாம் தயாரிப்பாளர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை 65 நாட்களுக்குள் முடித்துக் கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் இந்தப் படத்தையும் ரிலீஸ் செய்யலாமா என யோசித்துவருகிறதாம் படக்குழு.

- ஆதினி

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

3 நிமிட வாசிப்பு

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

சனி 21 ஆக 2021