மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

இப்பதான் செந்தில்பாலாஜி வந்துட்டுப் போனாரு: அப்டேட் குமாரு

இப்பதான் செந்தில்பாலாஜி வந்துட்டுப் போனாரு: அப்டேட் குமாரு

அதிமுக நண்பர் ஒருத்தரை பார்க்க அவரோட ஆபீசுக்கு நானும் சக நண்பரும் போயிருந்தோம். ‘இப்பதான் செந்தில்பாலாஜி வந்தாப்ல, அதுக்குள்ள போயிட்டாப்ல’னு சொன்னாரு. எனக்கு ஷாக் ஆயிடுச்சு. என்ன சார் உங்களை பாக்க செந்தில்பாலாஜி வந்தாரானு ஆச்சரியமா கேட்டேன். அவரோ, ‘என்ன நீங்க நம்ப மாட்டேங்குறீங்க. அவர் இங்க அடிக்கடி வருவாரு போவாரு’னு இன்னும் ஆச்சரியத்தை அதிகப்படுத்தினார். நான் ரொம்ப யோசிக்கறதைப் பாத்த அவரோட உதவியாளர், ‘சார், குழம்பிப் போயிடாதீங்க. கரண்டு வந்து போறதைதான் அவர் செந்தில்பாலாஜினு பேர் வச்சு சொல்றாரு’னு சஸ்பென்சை உடைச்சுட்டாரு. நான் அவர் ஆபீஸ்ல இருந்தவரைக்கும் செந்தில்பாலாஜி வரவே இல்லை.

நீங்க அப்டேட் பாருங்க

உள்ளூராட்டக்காரன்

சின்ன வயசுல நடு ராத்திரில பேய் வரும்னு சொல்லி பயமுறுத்துவாங்க

இப்போல்லாம் அந்த பேய் வந்தாலாவது கொஞ்ச நேரம் மனசு விட்டு பேசிக்கிட்டு இருக்கலாம்

-depression

சரவணன். ℳ

செல்போன்கள் வந்த பிறகு ஜன்னலோர சீட்டுகள் வெறுமையாகவே பயணிக்கிறது

Mannar & company

பணம் கொடுத்து போக, வர இருக்கிறவங்களுக்குதான் சுங்கச்சாவடி

ஆனா.. வசூல் பண்றவங்களுக்கு அது 'சுரங்க'சாவடி!

-டோல்கேட்

ரமேஷ் ஏழுமலை

காணாமல் போன நிலக்கரியாக நீ....,

உன்னை தேடும் அமைச்சராக நான்...!!!

PrabuG

திமுக அரசின் 100 நாட்கள் சாதனை அல்ல. சோதனை, வேதனைதான் அதிகம் - எடப்பாடியார்.

சார் நீங்க மைன்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிகிட்டு இருக்கீங்க

ச ப் பா ணி

காணிக்கை செலுத்த காசில்லாத போது, குருக்கள் கடக்கும் வரை மனம் கண்ணை மூடி இன்னும் கொஞ்சம் வேண்டிக்கொள்கிறது

தர்மஅடி தர்மலிங்கம்

என் குடிசைக்கு

பல நூறு கண்கள்

மழை வரும் நாட்களில்

நீங்கள் அதன் கண்ணீரை காணலாம்!

ஊர்க்காவலன்

காதலையும்,மழையையும் ரசிப்பதற்கு காலநிலையை விட மனநிலையே முக்கியம்...

mohanram.ko

கொஞ்சம் இனிப்பு, பெரிய கசப்பு, பெருவாரியான காரம்- இதுதான் திமுக ஆட்சியின் 100 நாள் சாதனை!- அண்ணாமலை.

என்ன, நேத்து அடையார் ஆனந்த பவன்ல பர்சேஸ்ஸா?

ℳ𝐬𝐝இதயவன்

பயங்காரவாத சக்திகள் நிரந்தரமாக ஆள முடியாது ~ பிரதமர் மோடி

என்ன ஜீ மன் கீ பாத் போயி 'கண்ணாடி பாத்'தா?!

சரவணன். ℳ

அனைத்து துறைகளிலும் திமுக அரசு தோல்வி அடைந்து வருகிறது!- ஈபிஎஸ்.

ஆனா லஞ்ச ஒழிப்பு துறை மட்டும் வெற்றி நடை போடுது தானே..!?

✰ ம ன் ன ன்

பால்

கெட்டுப்போச்சுனா

No 'மோர்'

பால்

ஊத்தியாச்சுனா

"No More".

மயக்குநன்

அதிமுகவின் குறைகளை காண்பதிலேயே அதிக நேரம் செலவிடுகிறது திமுக!- வானதி சீனிவாசன்.

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி மாதிரி குறைகள் வந்துக்கிட்டே இருந்தா... நேரம் செலவாகத்தானே செய்யும்..

கோழியின் கிறுக்கல்!

காதலுக்காக கண்ணு காது மூக்கெல்லாம் கொடுக்க வைத்து போன தலைமுறை இயக்குனர்களால் தம் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர்!

ஆனால் இப்ப இருக்கிற பசங்க 'காதலும் கடந்து போகும்'னு போய்ட்டே இருக்காங்க!

-லாக் ஆஃப்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

சனி 21 ஆக 2021