மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

ரஜினிகாந்த் வாழ்த்திய பெண் இயக்குநர்!

ரஜினிகாந்த் வாழ்த்திய பெண் இயக்குநர்!

நடன இயக்குநர் ரகுராமுக்கு இரண்டு மகள்கள். இளைய மகள் காயத்ரி ரகுராம் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். சினிமாவில் நடிகையாக வெற்றிபெற இயலாத நிலையில் நடன இயக்குநராக தனது குடும்ப தொழிலை தொடர்ந்தார் பாஜகவில் இணைந்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுஅரசியல் வட்டாரத்திலும் பிரபலமாக இருந்து வருகிறார்.

மூத்த மகள் சுஜா ரகுராம் திருமணத்துக்கு பின் கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார். தற்போது அவர் ஒரு ஹாலிவுட் படத்தை தயாரித்து, இயக்கி இருக்கிறார். படத்துக்கு, 'டேக் இட் ஈஸி' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

இதில் ரகுராமின் பேரக் குழந்தைகள் திரிசூல் மனோஜ், சனா மனோஜ் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இசையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

படம் பற்றி சுஜா ரகுராம் கூறியதாவது, 'திருமணத்துக்கு பின் அமெரிக்கா வந்த நான் ஆலிவுட் இயக்குனர்கள் பென் ஜூடி லெவின், பாயு பென்னட், டேனியல் லிர் ஆகியோருடன் பணிபுரிந்தேன். இந்த படத்தை என் கணவர் மனோஜ் தயாரித்திருக்கிறார். எனக்கு தமிழில் படங்கள் இயக்க ஆசை. சமீபத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா வந்த ரஜினி எங்கள் வீட்டுக்கு வந்தார். படம் பற்றி சொன்னதும் வாழ்த்து தெரிவித்தார்” என்றார்.

இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

சனி 21 ஆக 2021