மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

விஜய் சம்பளம் ரூ.120 கோடியா?

விஜய் சம்பளம் ரூ.120 கோடியா?

விஜய் நடிக்க நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படம் பரபரப்பாகத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதோடு, செல்வராகவன் , சாக்கோ உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் படம் தயாராகி வருகிறது. படத்துக்கான முதல் கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்தது. சென்னையில் மூன்று இடங்களில் செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்னை ஷூட்டிங் முடிந்ததும் ரஷ்யாவில் சில காட்சிகள் எடுக்கவும் திட்டமாம்.

விஜய்யின் 65வது படம் பீஸ்ட். இந்தப் படத்தை முடித்தவுடன், விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கிறார். விஜய் 66 படத்தை ‘தோழா’ பட இயக்குநர் வம்சி இயக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், இயக்குநர் யாரென்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்தப் படத்துக்கு விஜய்யின் சம்பளம் 120 கோடி எனும் தகவல் இணையத்தில் பரபரப்பாக பரவி வருகிறது.

படத்துக்குப் படம் சம்பளத்தை பெரிய நடிகர்கள் ஏற்றிக் கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, தமிழின் டாப் வசூல் ராஜா என்றால் அது விஜய் தான். அதுவும், விஜய் 66 படத்தில் தமிழ் & தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படம் உருவாகும் காரணத்தால் அவருக்குப் பேசப்பட்டிருக்கும் சம்பளம் 100 கோடி என்கிறார்கள். அதற்கான ஜிஎஸ்டி தொகையானது 18 கோடி வரும். ஆக, 118 கோடி என்பதே விஜய்க்கான சம்பளம் என்று சொல்லப்படுகிறது. இதுவே, இணையத்தில் விஜய்யின் சம்பளம் 120 கோடி என பரபரப்பு தகவலானது.

தில்ராஜூ படத்தில் விஜய்யின் சம்பளம் இதுவாக இருந்தால், தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகராக விஜய் இருப்பார். ஏனெனில், தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர் ரஜினி. இவரை முந்தி முதல் இடத்துக்குச் செல்வார் என்று சொல்லப்படுகிறது.

-தீரன்

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

சனி 21 ஆக 2021