மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

பாண்டிச்சேரியில் ஷூட் நடத்த என்ன காரணம்?

பாண்டிச்சேரியில் ஷூட் நடத்த என்ன காரணம்?

முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் ஜானரில் உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி & சமந்தா ஆகிய மூவர் நடிப்பில் இப்படம் உருவாகிவருகிறது. முக்கோண காதல் கதையாக இந்தப் படம் உருவாகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவனின் நானும் ரவுடிதான் படம் செம ஹிட். அதே ஜானரில் கொஞ்சம் வித்தியாசமான ட்ரீட்மெண்டில் இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இப்படத்தை செவன் ஸ்கிரீன் லலித்குமார் தயாரிக்க, முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் படத்தை தயாரிக்கிறார்.

லாக்டவுனுக்கு முன்பாக, இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. லாக்டவுன் தளர்வுகளின் போது கொஞ்சம் கொஞ்சமாகப் படப்பிடிப்புகள் நடந்தன. அப்படி, முக்கால் பாக ஷூட்டிங் முடிதுவிட்டது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்பொழுது பாண்டிச்சேரியில் நடந்துவருகிறது.

பாண்டிச்சேரி ஷூட்டிங் தாமதமானதற்கு விஜய்சேதுபதியின் தேதி சிக்கலே காரணம் என்கிறார்கள். எக்கச்சக்கப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி. அதனால், அவரின் கால்ஷீட் கிடைக்கவில்லை. இந்நிலையில், கடைசி ஷெட்யூலுக்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் வேக வேகமாக நடந்து வருகிறது. அதோடு, பாண்டிச்சேரி முதல்வரைக் கூட விஜய்சேதுபதி சென்று சந்தித்தது செய்தியானது. இன்னும் 10 நாட்களில் படத்துக்கான முழு ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

சரி, சென்னையில் நல்ல லொக்கேஷன்கள் இருக்கும் போது, ஏன் பாண்டிச்சேரியைத் தேர்ந்தெடுத்தார் விக்னேஷ் சிவன் என்கிற கேள்வி எழலாம். அதற்கு காரணம் இருக்காம். விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா - விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’ படம் செம ஹிட். அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கினார்கள். படமும் ஹிட்டானதால், அந்த செண்டிமெண்டினால் இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் கொஞ்சம் பாண்டிச்சேரியில் இருக்க வேண்டுமென விரும்பியிருக்கிறார்கள். அதனால் பாண்டிச்சேரியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதோடு, பாண்டிச்சேரியில் ஷூட்டிங் மேற்கொள்ள செலவும் கொஞ்சம் கம்மியாகவே பிடிக்கும். அதனாலும் இந்தத் திட்டம் என்று சொல்லப்படுகிறது.

-ஆதினி

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

வெள்ளி 20 ஆக 2021