மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

நடிகை சுவாரா பாஸ்கருக்கு எதிராக இந்துத்வாக்களின் போராட்டம்!

நடிகை சுவாரா பாஸ்கருக்கு எதிராக இந்துத்வாக்களின் போராட்டம்!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சுவரா பாஸ்கர். இவர் தனுஷ் நடித்த ராஞ்சனா, கங்கனா ரணாவத், மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

சுவரா பாஸ்கர், எப்போதுமே துணிச்சலாக தனது சர்ச்சை கருத்துகளை வெளிப்படுத்துபவர். தனது அதிரடி கருத்துக்களால் அவ்வப்போது செய்திகளில் இடம்பிடிப்பார்.

தற்போது அவர் தெரிவித்த கருத்து ஒன்று சமூகவலைதளங்களில் அவருக்கு எதிராக கடந்த சில நாட்களாககடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக சுவரா பாஸ்கரை கைது செய்யக் கோரும் பதிவுகள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது.

இந்த சர்ச்சைக்கு காரணம் சுவரா பாஸ்கரின் ட்வீட். அதில், தலிபான் தீவிரவாதிகளின் அட்டகாசம் ஆப்கானிஸ்தானில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது.

அதேபோல் இந்தியாவில் இந்துத்துவா தீவிரவாதமும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்துத்துவா தீவிரவாதத்தைப் பொறுத்துக்கொண்டிருக்கும் நாம், தாலிபனில் நடக்கும் தீவிரவாதத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறோம். நம் மனிதமும் அறமும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் அடையாளம் சார்ந்த ஒன்றாக இருக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

இந்தக் கருத்து வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்துத்துவா என்பதுடன் தீவிரவாதத்தை அவர் இணைத்துப் பேசியிருப்பதும், ஆப்கானிஸ்தானில் நடப்பதுதான் இந்தியாவிலும் நடக்கிறது என்று ஒப்புமைப்படுத்திப் பேசியிருப்பதும் பெரும் சர்ச்சையாகி வெடித்திருக்கிறது.

அப்படி உங்களுக்கு இந்துத்துவா உடன், இந்துஸ்தானில் வசிக்க பிரச்சினையாக இருந்தால் பாகிஸ்தான், வங்காளதேசம், துருக்கி, குவைத், ஈராக் போன்ற அமைதியை விரும்பும் மக்களுடன் சென்று மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார் ஒருவர்.

அதேபோல் மற்றொரு வலைத்தள பயன்பாட்டாளர் ``ஸ்வரா, நீங்கள் எந்த பயமும் இல்லாமல் வெளிப்படையாக என் மதத்திற்கு எதிராக ட்வீட் செய்கிறீர்கள், இந்துத்துவா பயங்கரவாதம் அல்ல என்பதற்கு இதுவே சாட்சி. ஒருவேளை இந்துத்துவா பயங்கரவாதமாக இருந்திருந்தால் இந்நேரம் உங்கள் தலை துண்டிக்கப்பட்ட போஸ்டரை நீங்கள் கண்டிருப்பீர்கள்" என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.

மற்றொருவர், ``ஸ்வரா பாஸ்கர் என் மதத்தை அவமதித்திருக்கிறார் மற்றும் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த செயல் பல இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது. இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக அவரை கைது செய்யுமாறு நான் மும்பை போலீஸை வேண்டுகிறேன்" என்றுள்ளார்.

இதேபோல், ``ஸ்வரா, உங்களுக்கு நிஜமாகவே தைரியம் இருக்கிறது என்றால் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று பர்தாவை அணிந்து கொண்டு ஒரு வாரம் இருந்து பாருங்கள், அப்போதுதான் இந்தியாவில் இருக்கும் சுதந்திரம் எந்த அளவுக்கு மேன்மையானது என்று உங்களுக்கு புரியும்" என்று இன்னொரு பயனர் காட்டமாக தெரிவித்துள்ளார். இப்படி ஸ்வரா பாஸ்கரை கைது செய்ய சொல்லி நெட்டிசன்கள் பெரிய அளவில் குரல் கொடுத்து வருகின்றனர்.

அதேபோல், மத அடிப்படைவாத கருத்துக்கள் என்ற அடிப்படையில் இருதரப்பிலும் உள்ள தீவிரமான போக்குகள் சிலவற்றை ஒப்பிட்டும் அவ்வப்போது கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

-இராமானுஜம்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

வெள்ளி 20 ஆக 2021