மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

அஜித்தின் 61 & 62-க்கு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்!

அஜித்தின் 61 & 62-க்கு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித்துக்கு ‘வலிமை’ படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையில் படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகி பெரிய ஹிட்டானது.

வலிமை படத்தின் டீஸர் வீடியோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும், வெளிநாடு ஷூட்டிங் மட்டுமே மீதமிருக்கிறது. அதற்கான பணிகளும் மும்மரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. திரையரங்கில் மட்டுமே வெளியிடுவதென தீர்க்கமான முடிவுடன் இருக்கிறது படக்குழு.

நேர்கொண்டப் பார்வைப் படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் - போனிகபூர் - அஜித் கூட்டணியில் வலிமை படம் உருவாகிவருகிறது. அஜித்தின் 60வது படம் வலிமை. அஜித்தின் 61வது படத்தையும் ஹெச்.வினோத் - போனிகபூர் கூட்டணி மேற்கொள்ள இருக்கிறது. வலிமை படத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காதென்பதால் மீண்டுமொரு படத்துக்காக வாய்ப்பளித்திருக்கிறார் அஜித்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, அஜித்தின் 62வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் மும்மரமாகப் போய்க் கொண்டிருக்காம். இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சூர்யா நடிக்க ‘சூரரைப் போற்று’ இவருக்கு செம ஹிட். இந்தப் படம் முடிந்த கையோடு, அஜித்தை சந்தித்துக் கதையைக் கூறினார் சுதா கொங்கரா. அஜித்துக்கும் அவர் சொன்னக் கதைப் பிடித்திருந்தது. அதோடு, சமீப காலங்களில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில் சுதா கொங்கராவைப் பார்க்க முடிகிறது. அதனால், அஜித் படம் மேலும் உறுதியாகியிருக்கிறது.

அஜித்தை இயக்க இருக்கும் இயக்குநர்களென பல பட்டியல்களும், லிஸ்டும் வெளியாகி ரசிகர்களைத் திணறடிக்கிறது. ஆனால், இப்போதைக்கு, அஜித்தின் 61 & 62 படங்களுக்கான திட்டங்கள் இதுமட்டுமே.

-தீரன்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

வெள்ளி 20 ஆக 2021